வைட்டமின் D குறைபாட்டிற்கு வெயில் மட்டும் தான் தீர்வா?
நமது உடலில் எலும்புகளின் ஆரோக்கியத்தில் வைட்டமின் டி முக்கிய பங்கு வகிக்கிறது.
எலும்புகளின் ஆரோக்கியத்தில் குறைபாடு இருக்கும் பொழுது நம்மால் எழுந்திருக்கக்கூட முடியாத நிலை இருக்கும். கால்சியம் முக்கியம் என பலரும் கூறுவார்கள். இந்த கால்சியத்தை எலும்பு கிரகிக்க உதவுவது வைட்டமின்-டி உதவியாக இருக்கிறது.
வழக்கமாக ஊட்டசத்துக்கள் மற்றும் வைட்டமின்களை உணவுகளில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.
ஒருவர், உணவில் இருந்து கால்சியத்தை பெற்றுக் கொள்ளலாம். அதே சமயம் உடலுக்கு தேவையான வைட்டமின் டியை காலை நேரம் உதயமாகும் வெயிலில் இருந்தும் பெற்றுக் கொள்ளலாம்.
இன்சுலின் சுரக்க, நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க, இதய நோய்கள் வராமல் தடுக்க வைட்டமின்-டி உதவியாக இருக்கின்றன.
வைட்டமின் டி பற்றிய மேலதிக தகவல்களை தொடர்ந்து எமது பதிவில் பார்க்கலாம்.
வைட்டமின்-டி யை பெறுவது எப்படி?
வைட்டமின்-டி கிடைப்பதற்காக மருந்து, மாத்திரைகள், பழங்கள், காய்கறிகள் உள்ளிட்ட பல விடயங்கள் இருந்தாலும், தினமும் அரை மணி நேரம் சூரிய ஒளியில் இருந்தால் உடலுக்கு இயற்கையாகவே வைட்டமின் டி கிடைத்து விடும்.
உதாரணமாக காலை 7.30 முதல் 9 மணி வரை- மாலை 4.30 முதல் 5.30 மணி வரை இருக்கும் சூரிய உதயத்தில் இருக்கலாம்.
வாக்கிங், ஜாகிங், சூரிய நமஸ்காரம் போன்ற உடற்பயிற்சிகள், அரை மணி நேரம் செய்வதன் மூலம் வைட்டமின்- டியை உள்ளே எடுத்து கொள்ளலாம். இதனால் உங்களின் தசைகள் வலிமை பெற்று, எலும்புகள் உறுதியாக மாறும்.
வெயிலில் நிற்க முடியாதவர்களுக்கு, வைட்டமின்-டி ஊசி போடலாம். அத்துடன் கீரை, பாதாம், வால்நட், பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை உணவில் எடுத்துக்கொள்ள வேண்டும். அசைவ பிரியராக இருப்பவர்கள் மீன், முட்டை உள்ளிட்ட உணவுகளில் இருந்து வைட்டமின் டியை பெறலாம்.
சூரிய உதயமான பின்னர் வெளியில் செல்பவர்கள் சன்ஸ்க்ரீன் க்ரீம்களைத் தோலில் தடவுவதைத் தவிர்ப்பது நல்லது. இப்படி தடவிக் கொண்டு வெளியில் செல்லும் பொழுது வைட்டமின் டியை பெறும் செயன்முறை தடைப்படும். அத்துடன் புற்றுநோயை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |