அதிகரிக்கும் டெங்கு அச்சுறுத்தல்: ரசாயனமின்றி நுளம்புகளை விரட்டும் எளிய முறைகள் உங்களுக்கு தெரியுமா?
மாலை நேரம் வந்தாலே வீட்டைச் சுற்றி நுளம்புகளின் தொல்லை ஆரம்பமாகிவிடுகிறது. சிறியதாகத் தோன்றும் இந்த நுளம்புகள், டெங்கு காய்ச்சல், மலேரியா போன்ற ஆபத்தான நோய்களை ஏற்படுத்தக்கூடியவை என்பதால் அவற்றிடம் எச்சரிக்கையாக இருப்பது மிகவும் அவசியம்.
தற்போது டெங்கு காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில், நுளம்புகளிடமிருந்து நம்மையும் நம் குடும்பத்தினரையும் பாதுகாத்துக் கொள்வது முக்கியமான விடயமாக மாறியுள்ளது.

நுளம்புகளை விரட்ட நாம் பயன்படுத்தும் பல பொருட்களில் அதிக அளவில் ரசாயனங்கள் கலந்திருப்பதால், அவை வீட்டின் சூழலையும் நமது ஆரோக்கியத்தையும் பாதிக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது. அதில் அதிகம் பயன்படுத்தப்படும் ஒன்றுதான் நுளம்பு சுருள்.
இயற்கை வழிகள்
நுளம்புகளை விரட்டுவதில் இது உதவினாலும், தொடர்ந்து அதன் புகையை சுவாசிப்பது உடலுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தலாம். குறிப்பாக வீட்டில் இருக்கும் குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் இதனால் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
அப்படியானால், ரசாயனப் பொருட்களை தவிர்த்து இயற்கையான முறையில் நுளம்புகளை எவ்வாறு விரட்டுவது? நம் வீட்டில் எளிதாகக் கிடைக்கும் சில இயற்கைப் பொருட்களை பயன்படுத்தி, எந்தவிதமான பக்கவிளைவுகளும் இல்லாமல் நுளம்புத் தொல்லையைக் குறைக்கும் வழிகளை இந்த காணொளி மூலம் தெரிந்துகொள்ளலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |