அக்குள் கருமையால் அளொகரியமா? 7 நாளில் தீர்வு கொடுக்கும் வீட்டு வைத்தியம்!
பொதுவாகவே பெண்கள் தங்களின் முக அழகை பராமரிப்பதில் காட்டும் அக்கறையை அவர்களின் அந்தரங்க பாகங்களை பராமரிப்பதில் காட்டுவது கிடையாது என்றால் மிகையாகாது.
அதன் காரணமாக பெரும்பாலான பெண்களுக்கு அந்தரங்க உறுப்புகளை சுற்றிலும் அவர்களின் சரும நிறத்தை விட ஒன்றிரண்டு ஷெடுகள் அதிகரித்து சற்று கருமையாக காணப்படும்.

குறிப்பாக அக்குள் கருமை தற்காலத்தில் பெரும்பாலான பெண்கள் மத்தியில் ஒரு முக்கிய பிரச்சினையாக காணப்படுகின்றது. அக்குள் பகுதி கருமையாக இருப்பதால் தாங்கள் விரும்பிய சில ஆடைகளை அணிய முடியதா நிலை இருக்கும்.
இன்னும் சில பெண்கள் அக்குள் கருமையை விரைவில் மறைய செய்ய வேண்டும் என்ற நோக்கில் சந்தைகளில் கிடைக்கும் ரசசாயனம் கலந்த கிரீம்களை வாங்கி பாவித்து பணத்தை இழப்பது மட்டுமன்றி பக்க விளைவுகளையும் இலவசமாக பெறுகின்றார்கள்.

இந்த பிரச்சினைக்கு முடிவு கட்டும் வகையில், வீட்டில் உள்ள சில இயற்கை பொருட்களை வைத்தே வெறும் ஒரே வாரத்தில் அக்குள் கருமையை எவ்வாறு போக்கலாம் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
வீட்டு வைத்தியங்கள்
வெள்ளரிக்காய் - எலுமிச்சை

சிறிது வெள்ளரிக்காயை எடுத்து அரைத்து, அத்துடன் பாதி எலுமிச்சையின் சாற்றினை பிழிந்து இரண்டையும் சேர்த்து நன்றாக கலந்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து இந்த கவவையை அக்குளில் தடவி, 20 நிமிடம் வரையில் அப்படியே காயவிட்டு, அதன் பின் குளிர்ந்த நீரால் அக்குளை கழுவ வேண்டும்.
இவ்வாறு வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தினாலே போதும் அக்குள் கருமை இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.
தயிர் - கடலை மாவு

ஒரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் தயிரை மற்றும் 1 ஸ்பூன் கடலை மாவை சேர்த்து கலந்து நன்றாக பேஸ்ட் பதத்திற்கு தயாரித்துக்கொள்ள வேண்டும்.
இந்த கலவையை அக்குளில் தடவி 15 நிமிடம் ஊறவிட்டு, பின்பு குளிர்ந்த நீரால் சுத்தம் செய்தால், நல்ல மாற்றத்தை பார்க்கலாம்.
இந்த பேக் அக்குளில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்குகளை வெளியேற்றுவதோடு, கருமையை நீக்குவதிலும் ஆற்றல் காட்டுகின்றது.
உருளைக்கிழங்கு - எலுமிச்சை

உருளைக்கிழங்கை துருவி சாறு எடுத்து ஒரு கிண்ணத்தில் போட்டு அதனுடன் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அதை அக்குளில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்பு பஞ்சுருண்டையை நீரில் நனைத்து துடைத்து எடுக்க வேண்டும். இந்த கவவையை தொடந்து 7 நாட்கள் பயன்படுத்தினால் அக்குள் கருமை காணாமலேயே போய்விடும்.
மஞ்சள்- தயிர் - தேன்

ஒலு கிண்ணத்தில் 1 ஸ்பூன் மஞ்சள் தூளை எடுத்து, அத்துடன் 1 ஸ்பூன் தேன் மற்றும் 2 ஸ்பூன் தயிரை சேர்த்து நன்றாக பேஸ்ட் செய்து, அக்குளில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
பின்னர் குளிர்ந்த நீரால் அக்குளை கழுவ வேண்டும். இந்த பேக் அக்குளில் இருக்கும் இறந்த செல்களை நீக்கி, அக்குள் கருமையை வெறும் 7 நாட்களில் இல்லாமல் ஆக்கிவிடும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |