வீட்டிலிருந்தபடியே 10 நிமிடத்தில் பான் கார்டு பெறுவது எப்படி?
வீட்டிலிருந்த படியே ஆதார் காடை மாத்திரம் கொண்டு ஆன்லைனில் பான் கார்டுகளை விண்ணப்பிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
பொதுவாக தற்போது இருக்கும் பொருளாதார முறைப்படி, பான் கார்ட் பயன்படுத்தி தான் பணபறிமாற்றம் செய்யப்படுகிறது. இந்த கார்ட்டை பெறுவதற்கு எங்கும் அழைய வேண்டிய தேவை இருக்காது.
இதனை தற்போதுள்ள தொழிநுட்பத்தை பயன்படுத்தி வீட்டிவிருந்தவாரே விண்ணப்பித்துக் கொள்ள முடியும். இதனை தொடர்ந்து வரும் தகவல்களை கொண்டு எவ்வாறு பான் கார்ட்டுக்கு விண்ணப்பிக்கலாம் என்பது குறித்து பூரண விளக்கத்தைப் பெற்றுக் கொள்ள முடியும்.
எளிய படிமுறைகள்
1. முதலில் பான் கார்டுக்கு விண்ணப்பிக்க, PAN கார்டு NSDL அல்லது UTITSL என்ற இணைய முகவரியை அனுக வேண்டும்.
2. உள்ளே செல்வதற்கு இதில் ஜிஎஸ்டி என ரூ.93 கட்டணம் அறவிடப்படும் இதனை கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு அல்லது வங்கி வரைவோலை மூலம் ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
3. தொடர்ந்து வரும் கேள்விக்கு உரிய பதிலளிக்க வேண்டும் மற்றும் இதில் வரும் முக்கிய ஆவணங்களை சமர்பிக்க வேண்டும் அல்லது NSDL அல்லது UTITSL அலுவலகத்திற்கு சென்று சமர்ப்பிக்க வேண்டும். உதாரணமாக (பெயர், முகவரி உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்கள்)
4. முழுமையாக தகவலை பதிவு செய்த பின்னர் இறுதியாக Save பொத்தானை அழுத்த வேண்டும். இதனை தொடர்ந்து ஒப்புகை சீட்டு ஒன்று உங்களுக்கு கிடைக்கும்.
5. 14 நாட்களுக்கு பின்னர் பான் கார்ட் நீங்கள் கொடுத்த முகவரிக்கு வரும்.
முக்கிய குறிப்பு
இதில் எதாவது தவறுகள் ஏற்படின் ஆன்லைனில் சென்று திருத்திக் கொள்ள முடியும்.