கொரிய பெண்களைப் போன்று முகம் கண்ணாடியாக இருக்கனுமா? இதுதான் அவங்க சீக்ரெட்
கொரியன் நாட்டு பெண்களைப் போன்று முகம் கண்ணாடியாக இருக்க என்ன செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
இன்று பெரும்பாலான பெண்கள் முகத்தை அழகாக்க வேண்டும் என்றால் பல விலையுயர்ந்த அழகுசாதனப் பொருட்களை பயன்படுத்துகின்றனர்.
முகம் அழகாக இருக்க தோல் வகைக்கு ஏற்ப தினமும் தோல் பராமரிப்பு வழக்கத்தைப் பின்பற்ற வேண்டும்.
அதிலும் கொரியன் நாட்டு பெண்களை போன்று அழகாக இருக்க அதிகமாகவே விரும்புகின்றனர். இந்த பதிவில் கொரியன் ஸ்டைல் ஃபேஷியல் வீட்டிலேயே எளிதாக எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
கொரியன் ஸ்டைல் ஃபேஷியல்
கிண்ணம் ஒன்றில் தேவையான அளவு பப்பாளியை எடுத்து நன்றாக பிசைந்து கொள்ளவும். பின்பு 2 ஸ்பூன் பால் சேர்த்து நன்கு பேஸ்ட் போன்று கலக்கவும். இதனை முகத்தில் போட்டு 3 நிமிடம் மசாஜ் செய்து பின்பு முகத்தை சுத்தம் செய்யவும்.
பின்பு மீண்டு்ம் ஒரு கிண்ணத்தில் பப்பாளியை போட்டு பிசைந்து, இதனுடன் 2 ஸ்பூன் தேன் கலந்து நன்கு பேஸ்ட் போன்று கலக்கவும். இதனை முகத்தில் தடவி 15 நிமிடம் மசாஜ் செய்து பின்பு தண்ணீரால் சுத்தம் செய்யவும்.
இப்போது ஒரு டவலால் முகத்தை சுத்தம் செய்த பிறகு நீங்கள் வழக்கமாக பயன்படுத்தும் மாஸ்ச்சரைசர் பயன்படுத்துங்கள். வாரத்திற்கு ஒரு முறையாவது இந்த பேஸ் பேக் பயன்படுத்தி வந்தால் விரைவில், உங்கள் முக தோலில் மாற்றங்களைக் காணத் தொடங்குவீர்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |