உங்களோட 6 மாத Call History வேண்டுமா? ஈஸியான வழி இதோ
நாம் பயன்படுத்தும் போனில் கடந்த 6 மாத கால Call History-யை எவ்வாறு பெற்றுக்கொள்ளலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய டிஜிட்டல் உலகில் செல்போனின் பயன்பாடு அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. மேலும் தொழில்நுட்ப வளர்ச்சியால் பல மாற்றங்கள் ஏற்படுவதுடன், நொடிப்பொழுதில் தகவல்களையும் அறிந்து கொள்ள முடிகின்றது.
அந்த வகையில் நமது செல்போனில் நாம் யாருக்கெல்லாம் பேசியுள்ளோம் என்பதை தெரிந்துகொள்ள இருக்கும் ஒரு வசதி தான் கால் ஹிஸ்டரி.
இந்நிலையில் ஒரு மாதத்திற்கான கால் ஹிஸ்ட்ரி மட்டுமே பெரும்பாலான போனில் இருக்கும் நிலையில், ஆறு மாத காலத்திற்கான ஹிஸ்ட்ரியையும் நாம் அறிந்து கொள்ளலாம்.
கடந்த ஆறு மாத காலத்திற்கு யாருக்கெல்லாம் அழைத்திருக்கிறீர்கள் என்பதை தெரிந்துகொள்ள ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகிய நிறுவனங்கள் சில வசதிகளை செய்து வைத்துள்ளது.
ஏர்டெல்
ஏர்டெல் நிறுவனத்தை பொறுத்தவரை கடந்த ஆறு மாத காலத்திற்கான கால் ஹிஸ்டரி பற்றி தெரிந்து கொள்ள விருப்பப்படுபவர்கள், தங்களது மொபைலில் இருந்து "EPREBILL" என்று டைப் செய்து அதை 121 என்ற எண்ணுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
மேலும் அதில் உங்களுக்கு ஒன்றிலிருந்து, ஆறு மாதத்திற்கு இடையில் எத்தனை மாதங்களுக்கான கால் ஹிஸ்டரி தேவை என்பதையும் நீங்கள் பதிவிட வேண்டும்.
நீங்கள் பதிவிடும் போது உங்களுடைய மின்னஞ்சல் முகவரியையும் பதிவிட்டால் நேரடியாக வந்து சேர்ந்துவிடும். நிச்சயம் உங்களுடைய போனிலிருந்து மட்டுமே அந்த குறுஞ்செய்தியை அனுப்ப வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல ஏர்டெல் வாடிக்கையாளர் சேவை மையம் மற்றும் நேரடியாக ஏர்டெல் நிறுவன கடைகளுக்கு சென்றும் இந்த சேவையை நீங்கள் தாராளமாக பெற்றுக் கொள்ளலாம். ஆனால் அங்கு சிறிய தொகை வசூலிக்கப்படும்.
ஜியோ
ஜியோ சிம்மை பொறுத்தவரை "மை ஜியோ" என்ற செயலியை முதலில் உங்கள் போனில் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
அதில் நீங்கள் லாகின் செய்த பிறகு, அதில் உள்ள "மை ஸ்டேட்மென்ட்" என்கின்ற பக்கத்திற்கு சென்று உங்களுக்கு தேவையான தேதிகளை பதிவிட்டு உங்களது Call History-யை தெரிந்து கொள்ளலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |