சிலைகளுக்கு அல்ல உயிர்களுக்கு கொடுப்பதே உயர்வான செயல்
இன்று பலர் ஆலயங்களில் பாலாலும்,தேனாலும் சிலைகளுக்கு அபிஷேகம் செய்துகொண்டிருக்கின்ற அதே நேரம், உலகில் பலர் ஒரு வேளை உணவுக்கு கூட வழி இல்லாமல் இறந்துக்கொண்டிருக்கிறார்கள் என்பது நிதர்சணம்.
செல்வந்தர்களில் பலர் கலியாட்ட விடுதிகளிலும் மதுபானசாலைகளிலும் பணத்தை வாரியிரைக்க தயாராக இருக்கின்ற போதிலும் ஏழைகளின் கல்விக்கு உதவுவதற்கோ அவர்களின் பசி பிணியை போக்கவோ தயாராக இல்லை என்பது வருந்தத்தக்க உண்மை.
அமெரிக்கா, பிரித்தானியா போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளிலும், இலங்கை, இந்தியா போன்ற மூன்றாம் உலக நாளுகளிலும், சோமலியா,
எத்தியோபியா போன்ற ஓரங்கட்டப்பட்ட அரசுகளிலும் பொதுவான ஒரு விடயம் தான் வறுமை எல்லா நாடுகளிலும் வறுமை ஒவ்வொரு வடிவில் இருக்கத்தான் செய்கிறது.
வறுமை என்பது உணவு, உடை, உறைவிடம், பாதுகாப்பான குடிநீர், கல்வி பெரும் வாய்ப்பு, பிற குடிமக்ககளிடமிருந்து மதிப்பு பெறுதல் போன்றவை உட்பட வாழ்க்கை தரத்தை தீர்மானிப்பவற்றை இழந்தநிலை ஆகும்.
வறுமை பற்றிய விளக்கம்
பல நாடுகளில் அதிலும் முக்கியமாக வளர்ந்துவரும் நாடுகளில் வறுமை ஒழிப்பு என்பது ஒரு முக்கியமான இலக்காக கருத்தப்படுகிறது. வறுமைக்கான காரணம், அதன் விளைவுகள்,அதனை அளப்பதற்கான வழிமுறைகள் போன்றவை தொடர்பான வாதங்கள் என்பன வறுமை ஒழிப்பை திட்டமிடுவதிலும் நடைமுறை படுத்துவத்திலும் தாக்கத்தை கொண்டுள்ளது.
இதனால் இவை அனைத்துலக வளர்ச்சி, பொது நிர்வாகம் ஆகியவற்றோடு நெருங்கிய தொடர்புகளை கொண்டுள்ளது. வறுமையினால் ஏற்படும் வலி, துன்பம் காரணமாக வறுமை விரும்பதகாத ஒன்றாக கருத்தப்படுகிறது.
வறுமை தனிப்பட்டவர்களையோ அல்லது குழுக்களையோ பாதிக்க கூடும். இது வளர்த்து வரும் நாடுகளில் மட்டுமன்றி வளர்ந்த நாடுகளிலும் வீடின்மை போன்ற பல சமுதாய பிரச்சினைகளுக்கு காரணமாக அமைகிறது.
வறுமையின் தன்மை அடிப்படையில் வறுமையானது முற்றிலும் வறுமை, ஒப்பீட்டு வறுமை என இரு வகைகளில் காணப்படுகிறது. முற்றிலும் வறுமை எனப்படுவது ஒரு குடும்பத்தின் வருமானம் அக் குடும்பத்தினரின் அடிப்படை தேவைகளை கூட நிறைவேற்ற முடியாத நிலையை குறிக்கும்.
வறுமை கோடு (poverty line)
ஒப்பீட்டு வறுமை எனப்படுவது இரண்டு பிரிவினரின் வாழ்க்கை தரதிற்கு இடையில் உள்ள ஏற்ற தாழ்வுகளை குறிப்பதாகும். இந்தியா, இலங்கை போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் இவ்விரண்டு வறுமையும் காணப்படுகிறது.
சோமலியா, எதியோப்பியா போன்ற நாடுகளில் முற்றிலும் வறுமை நிலவுகிறது. இதற்கு தேசிய வருமான பங்கீட்டில் உள்ள ஏற்ற தாழ்வுகளே காரணமாக அமைகிறது.
வறுமை கோடு (poverty line) என்பது வறுமையை வரையறுக்க பயன்படும் ஒரு அளவுகோல் ஆகும். குறைந்தபட்ச நுகர்வு தரத்தை கூட பெற முடியாதவர்கள் வறுமை கோட்டில் வாழ்பவர்கள். ஒரு குறிப்பிட்ட வாழ்க்கை தரத்தை அடைய தேவையான குறைந்தபட்ச வருமான வரம்பே வறுமை கோடு எனப்படுகிறது.
வருமானம் தவிர்த்து ஒருவர் உட்கொள்ளும் உணவின் அளவை பொருத்தும் வறுமை கோடு வரையறுக்கப்படுகிறது. வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு வறுமை கோடு வரையறைகள் பயன்படுத்தப்படுகிறது.
குறைந்தபட்ச நுகர்வு என்பது ஒருவர் உயிர் வாழ்வதற்கு தேவையான தானியம், பருப்பு வகைகள், பால், சக்கரை, எண்ணெய் ஆகியவற்றின் குறைந்தபட்ச அளவு தீர்மானிக்கப்படுகிறது.
இப்பண்டங்களின் விலையை கணக்கில் கொண்டு தேவையான குறைந்தபட்ச பொருட்களை வாங்குவதற்கு தேவையான பணம் மதிப்பீடு செய்யப்படுகிறது. இதுவே ஒருவரின் குறைந்தபட்ச நுகர்வு செயலாகும். இது ஒரு ஆண்டிற்கு கணக்கிடப்படுகிறது.
இதற்குசமனான வருமானத்தைபெறாதவர்கள் அல்லது அதற்கு குறைவான வருமானத்தை பெறுபவர்கள் வறுமை கோட்டின் கீழ் வாழ்பவர்கள் ஆவர்.
உலக வறுமை ஒழிப்பு தினம்
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 17ஆம் திகதி உலகம் முழுவதும் உலக வறுமை ஒழிப்பு நாளாக அனுஷ்டிக்கப்படுகிறது.
உலகளாவிய ரீதியில் வறுமை தொடர்பான விழிப்புணர்வை ஏப்படுத்தி பசிபிணியில் இருந்து மக்களை விடுவிப்பதற்க்காக ஐக்கிய நாடுகள் அமைப்பு 1992 ஆம் ஆண்டு வறுமை ஒழிப்பு நாளை அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொண்டது.
உலகில் வறுமை நிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ வேண்டியதன் அவசியம் குறித்து அனைத்து தரப்பினரின் கவனத்தை ஈர்க்கும் நோக்கத்துடன் இத்தினம் கடைப்பிடிக்கப்படுகின்றது.
1987 ஆம் ஆண்டு முதல் முதலாக பிரான்ஸின் பாரிஸ் நகரில் இத் தினம் கடைபிடிக்கப்பட்டது. பசி, வறுமை, வன்முறை, பயம் என்பவற்றுக்கு பாழியானோரை கெளரவிக்கும் வகையில் 100 000 மக்கள் டொக்கேரோவின் மனித உரிமைகள் மற்றும் விடுதலை சதுக்கத்தில் ஒன்றுக்கூடி இத் தினத்தை அனுஷ்டித்தனர்.
ஒருவரால் எல்லோருக்கும் உதவ முடியாது ஆனால் நிச்சயம் எல்லோராலும் யாராவது ஒருவருக்கு உதவ முடியும். உதவ மனம் உள்ளவர்களிடம் பணம் இருப்பது குறைவு பணம் இருப்பவர்களிடம் எல்லோருக்கும் உதவும் மனம் இருப்பது குறைவு.
மூட நம்பிக்கைகளுக்காக செலவிடும் பணத்தை ஒருவர் உயிர் வாழ கொடுத்தால் அதை விட உயர்வான செயல் எதுவும் கிடையாது. சிலைகளுக்கு உணவு கொடுப்பதை விட உயிர்களுக்கு உணவு கொடுக்க நினைத்தால் நீங்களும் இறைவனின் மனமுடையவர்களே.
ஒவ்வொரு நாட்டிலும் செல்வந்தர்கள் ஆடம்பரத்திற்காகவும், கலியாட்ட மற்றும் மதுபானதிற்கு செலவிடும் பணத்தில் பாதியை ஏழைகளுக்கு கொடுக்க நினைத்தால் கூட வறுமை ஒழிப்பு தினம் என்பதே இருக்க வேண்டிய அவசியம் இருக்காது என்பது உறுதி.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |