நின்று கொண்டே தண்ணீர் குடிச்சா இவ்வளவு ஆபத்து வருமாம்.... இனி இந்த தவறுகளை எல்லாம் செய்ய வேண்டாம்!
தண்ணீர் உடலுக்கு உணவு போல அவசியமான ஒன்று. ஆணுக்கு ஒரு நாளைக்கு 2.5 லிட்டர் தண்ணீரும், பெண்ணுக்கு ஒரு நாளைக்கு 2 லிட்டர் தண்ணீரும் கண்டிப்பாக தேவைப்படுகிறது.
இவை தவிர திரவ ஆகாரங்கள் உடலுக்கு செல்வது தனி.
சித்த மருத்துவ முறைப்படி தண்ணீரை எடுத்துக் கொள்ளும் போது சில விதிமுறைகளை பின்பற்றுவது அவசியம். அது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.

தண்ணீர் குடிக்கும் போது உட்கார்ந்துதான் குடிக்க வேண்டும்
எப்பொழுதும் தண்ணீர் குடிக்கும் போது உட்கார்ந்து குடிப்பது நல்லது.
நின்று கொண்டே தண்ணீர் குடிப்பது திரவங்களின் சமநிலையை சீர்குலைக்க செய்து விடும்.
இது மூட்டுப் பகுதிகளையும் பாதிக்கிறது. மூட்டுகளில் உள்ள திரவங்களில் குறைப்பாட்டை ஏற்படுத்துகிறது. இதன் விளைவாக மூட்டுவலி மற்றும் கீல்வாதம் ஏற்படலாம்.
நமது தசைகள் மற்றும் நரம்பு மண்டலம் மிகவும் தளர்வானது என்பதால் உட்கார்ந்து குடிப்பது நல்லது. உணவை செரிமானம் செய்ய மற்றும் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை உறிஞ்ச தண்ணீர் உதவுகிறது.

குறைவாக தண்ணீர் குடிக்கும் போது ஜீரண பிரச்சினைகளை சந்திக்க நேரிடலாம். இது இதய நோய் பாதிப்பு மற்றும் சிறுநீரக பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
அதிகளவு தண்ணீர் குடிப்பது ஆபத்து
ஒரே மூச்சில் மடக் மடக் என்று வேகமாக அதிகளவு நீரைப் பருகுவதை தவிருங்கள்.
கொஞ்சம் கொஞ்சமாக நீரை குடிப்பது தான் நல்லது.
ஒரே நேரத்தில் அதிகளவு நீரை குடிப்பது சிறுநீரகத்திற்கு தேவையற்ற அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. அதனால் சீரான இடைவெளியில் தண்ணீர் குடிப்பது நல்லது
வெதுவெதுப்பான நீருடன் நாளைத் தொடங்குங்கள்
குளிர்ந்த நீரானது இரத்த ஓட்டத்தை தடுத்து மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளையும் உண்டாக்கும்.
எனவே வெதுவெதுப்பான அல்லது சாதாரண நீர் எப்போதும் சிறந்தது.
இது சரியான செரிமானம் மற்றும் வளர்ச்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது. எடை இழப்புக்கு உதவுகிறது. வெதுவெதுப்பான நீரை குடித்து வரும் போது உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் குறைந்து இரத்த குழாய்களில் உள்ள அடைப்பு நீக்கப்படுகிறது.

உணவுக்கு பிறகு வெதுவெதுப்பான நீர் உடலில் இருக்கும் கொழுப்பை குறைக்க உதவுகிறது.
காலையில் எழுந்ததும் ஒரு தம்ளர் வெதுவெதுப்பான நீருடன் நாளைத் தொடங்குவது மிகவும் நல்லது.
இது பல விதமான நோய்களில் இருந்து விடுபட உதவுகிறது. வெதுவெதுப்பான நீரை குடித்து வருவது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி குடலைச் சுத்தமாக வைக்க உதவுகிறது.
காலை வேளையில் 500 மி. லி முதல் 1 லிட்டர் வரை தண்ணீரை எடுத்துக் கொள்ளலாம்.
எலுமிச்சை, துளசி, சீரகம், நன்னாரி வேர் போன்றவற்றை தண்ணீரில் போட்டு ஊறவைத்து குடிப்பது உடலுக்கு மேலும் நல்லது.
