இன்ஸ்டாகிராமில் டவுன்லோடு செய்யும் quality இல்லையா? இதை செய்தால் போதும்
இன்ஸ்டாகிராமில் பதிவிறக்கம் செய்யும் புகைப்படத்தின் தரம் குறைவாக இருந்தால் அதனை எவ்வாறு சரியாக்குவது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
இன்ஸ்டாகிராம் புகைப்படம்
பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் சமூக வலைதளங்களில் இன்ஸ்டாகிராம் முதலிடம் வகிக்கிறது.
இன்ஸ்டாகிராம் பயனர்கள் தங்களது அன்றாட நிகழ்வுகளை புகைப்படமாகவும், காணொளியாகவும் பகிர்ந்து வருகின்றனர்.
ஆனால் இப்படி போட்டோ அல்லது வீடியோ இன்ஸ்டாகிராமில் பதிவேற்றும்போது நாம் அப்லோட் செய்யும் உண்மையான தரத்திலிருந்து குறைந்த தரத்திலேயே இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.
மேலும் நாம் துல்லியமாக எடுத்திருக்கும் புகைப்படம் கூட அதில் பதிவேற்றம் செய்யும் போது மங்கலாகவே இருக்கின்றது.
இன்ஸ்டாகிராம் அப்லோடு செய்யும் பதிவுகளின் தரத்தைக் குறைப்பது மூலமாக லோடிங் வேகத்தை அதிகரிக்க முடியும் என்பதால் அப்படி செய்கிறார்கள்.
தரமான புகைப்படத்தை பதிவிறக்கம் செய்வது எப்படி?
ஆனால் இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு இது திருப்தியளிக்காத நிலையில், சில செயல்முறைகளை பயன்படுத்தி போட்டோ மற்றும் வீடியோவின் தரத்தை இன்ஸ்டாகிராமில் மேம்படுத்த முடியும்.
முதலில் உங்களது இன்ஸ்டாகிராம் கணக்கில் உள்ளே செல்லுங்கள். பின்னர் உங்கள் ப்ரொபைல் பக்கத்தில் வலது மேல் புறத்தில் இருக்கும் மூன்று புள்ளிகளைத் தொடவும்.
அதில் Settings & Privacy என்பதை கிளிக் செய்து Media Quality என்பதைத் தேர்வு செய்யுங்கள்.
பின்னர் அதில் காட்டப்படும் ஆப்ஷனில் Upload at the Highest Quality என்பதைத் தேர்வு செய்யுங்கள். இனிமேல் தரமான புகைப்படத்தினை நீங்கள் பெறுவதற்கு எந்தவொரு தடையும் இருக்காது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |