வீட்டில் நெருக்கடி... இரண்டாவது திருமணத்திற்கு தயாரான நடிகை சமந்தா
நடிகை சமந்தா வீட்டில் பெற்றோர்கள் கொடுக்கும் நெருக்கடியால் இரண்டாவது திருமணத்திற்கு தயாராவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை சமந்தா
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் சமந்தா தற்போது தொடர்ந்து மருத்துவ பரிசோதனையில் இருந்து வருகின்றார்.
சென்னையில் பிறந்து ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் படிப்பை முடித்த அவர் 2010ம் ஆண்டு வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து பானா காத்தாடி திரைப்படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்த இவர் தெலுங்கு திரையுலகிலும் முன்னணி நடிகையானார்.
தெலுங்கு பட நடிகரான நாக சைதன்யா என்பவரை 2017ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்கள் 2021ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டிருக்கும் சமந்தா அவ்வப்போது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகின்றார்.
இரண்டாவது திருமணமா?
சினிமா மட்டுமின்றி வெப் சீரிஸிலும் நடித்த சமந்தா மேலும் சில படங்களில் நடிப்பதற்கு பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றார்.
பேட்டி ஒன்றின் போது இரண்டாவது திருமணம் எப்போது என்று கேள்விக்கு, தோல்வியில் முடியும் முதல் திருமணங்களின் எண்ணிக்கையைவிட இரண்டாவது திருமணங்களின் எண்ணிக்கை அதிகம் என்று புள்ளிவிவரத்துடன் சமந்தா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சமந்தாவின் குடும்பத்தினர் அவருக்கு இரண்டாவது திருமணம் செய்வதற்கு நெருக்கடி கொடுக்கின்றார். வெளியே மாப்பிள்ளை தேடாமல் உறவினர் பையனையே முடிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |