அட்டகாசமான சுவையில் கல்யாண வீட்டு பிஸிபேளாபாத் செய்வது எப்படி?
அட்டகாசமான சுவையைத் தரக்கூடிய மைசூருவை பூர்வீகமாகக் கொண்ட பிஸிபேளாபாத் கர்நாடக மாநிலத்தித்தின் மிகவும் பிரபலமான உணவாகும்.
இது கிட்டதட்ட சாம்பார் சாதம் போல் காணப்பட்டாலும் இதற்கும் சாம்பார் சாதத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன.
இந்த பிஸிபேளாபாத் பருப்பு மற்றும் அரிசியை சேர்த்து செய்யும் ஒரு சாதமாகும், எனவே அரிசி மற்றும் பருப்புடன் பிஸிபேளாபாத் செய்வது எப்படி என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- அரிசி - 100 g
- கடலை பருப்பு - 1 1/2 கப்
- உளுந்தம் பருப்பு - 1 1/2 கப்
- துவரம் பருப்பு - 75g
- காய்ந்த மிளகாய் - 1 1/2 கப்
- கசகசா - 1 1/2 கப்
- இலவங்கம் - 20g
- பட்டை - 40g
- சீரகம் - 20g
- வெந்தயம் - 10g
- தனியா - 10g
- பிரிஞ்சி இலை -4
- கொப்புரை தேங்காய் - 50g
- எண்ணெய்- 4 ஸ்பூன்
- கடுகு - தேவையான அளவு
- முந்திரி - தேவையான அளவு
- புளி தண்ணீர் - தேவையான அளவு
- வெல்லம் - 50g
- தண்ணீர் - 1 லீட்டர்
- மஞ்சள் தூள் -1/2 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
செய்யும் முறை
முதலில் அரிசியையும் துவரம் பருப்பையும் பிரஷர் குக்கரில் போட்டு ஐந்து டம்ளர் தண்ணீர் ஊற்றி நான்கு விசில் வரும் வரை வேக வைத்து எடுக்க வேண்டும்.
பின்னர் பிஸிபேளாபாத் பவுடர் தயாரிக்க அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து கடலை பருப்பை எண்ணை இல்லாமல் வறுக்க வேண்டும். பின்னர் அதை ஒரு பாத்திரத்தில் மாற்ற வேண்டும்.
பின்னர் கசகசாவை, உளுத்தம் பருப்பை வறுக்க வேண்டும், கடலை பருப்பு கொட்டிய பாத்திரத்தில் இந்த கசகசாவையும் உளுத்தம்பருப்பையும் கொட்ட வேண்டும்.
இதந்கு பின்னர் காய்ந்த மிளகாய், இலவங்கம், பட்டை, சீரகம், வெந்தயம், தனியா, பிரிஞ்சி இலை ஆகியவற்றை தனித்தனியே வறுக்கவும்.
அடுத்து அதே பாத்திரத்தில் ஆறு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் கொப்புரை தேங்காயை துருவி வறுத்து எடுக்க வேண்டும்.
இதன் பிறகு அனைத்தையும் தரையில் ஒரு பேப்பர் விரித்து அதில் போட்டு 20 நிமிடங்களுக்கு உள்அறை வெப்பத்தில் ஆற விடவும் .
பின்னர் இதை மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்து கொள்ளவும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் எண்ணை ஊற்றி கடுகு, முந்திரி மற்றும் புளித் தண்ணீர், வெல்லம் மற்றும் ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
ஆறு நிமிடங்களில் பச்சை வாடை போன பிறகு அரை ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்க்கவும், பின்னர் வேக வைத்த துவரம் பருப்பு மற்றும் அரிசியை கொதிக்கும் தண்ணீரில் போடவும்.
குறைந்த தீயில் ஏழு நிமிடங்களுக்கு வேக விடவும். அதன் பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து இரண்டரை ஸ்பூன் பிஸிபேளா பாத் பவுடரை 40 மில்லி தண்ணீரில் கலந்து அதை கொதிக்கும் சாதத்தில் ஊற்றவும் .
அடுத்ததாக கால் ஸ்பூன் பெருங்காயத் தூள், கொத்தமல்லி போட்டு இரண்டு நிமிடங்களுக்கு கொதிக்க விட்டு எடுத்து பரிமாறவும்.