இந்த பழங்களை சாப்பிட்ட பின் மறந்தும் தண்ணீர் குடிக்காதீங்க: ஜாக்கிரதை
பொதுவாக சில உணவு வகைகளை சாப்பிட்ட பின் தண்ணீர் குடிக்கக் கூடாது என்பார்கள்.
அந்த வகையில் வாழைப்பழங்களை சாப்பிட்ட பின்னர் தண்ணீர் குடிக்கக் கூடாது. ஏனெனில் வாழைப்பழங்களில் பொட்டாசியம், மாங்கனீசு ஆகிய சத்துக்கள நிறைந்துள்ளன, இது தண்ணீர் குடிப்பதால் பாதிக்கப்படலாம்.
மேலும் இது போன்ற சில பழங்கள் சாப்பிட்ட தண்ணீர் குடிப்பதால் அதன் சத்துக்கள் அழிய வாய்ப்பு இருப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
இதன்படி, அப்படியான பழங்கள் என்னென்ன என்பதனை தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
தண்ணீர்+ பழங்கள்
1. மாம்பழம் சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கக்கூடாது. இதனால் மாம்பழத்தில் உள்ள என்ஸைம்களால் செரிமான அமைப்பு பாதிக்கப்படும்.
2. பொதுவாக பப்பாளிப்பழத்தில் பாப்பைன் (papain) என்ற என்ஸைம் உள்ளது. இந்த பதார்த்தம் இருப்பதால் பப்பாளி பழத்தை சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிப்பதால் வயிறு மந்தமாகுவதோடு வயிற்றுப்போக்கையும் ஏற்படுத்திவிடும்.
3. அன்னாசி பழத்தில் ப்ரோமிலைன் (Bromelain) என்ற என்சைம் உள்ளது. இதனால் அன்னாசி சாப்பிட்ட பின்னர் தண்ணீர் குடிக்கக் கூடாது. இப்படி குடிப்பதால் வயிற்றுப்போக்கு மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்படக்கூடும்.
4. ஆரஞ்சு பழத்தில் அதிகமான அமிலத்தன்மை உள்ளது. இது தண்ணீருடன் தாக்கம் புரிந்து நெஞ்செரிச்சல் பிரச்சினைகள் ஏற்படும்.
5. ஆப்பிளில் பெக்டின் என்ற நார்ச்சத்து உள்ளது. இதனை தண்ணீருடன் சேர்த்து சாப்பிடும் பொழுது வயிற்றில் வீக்கம் உண்டாவதோடு மந்தமான உணர்வு ஏற்படும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |