தன்னம்பிக்கையை எளிதில் வளர்க்க வேண்டுமா? இதையெல்லாம் கட்டாயம் செய்ங்க
ஒவ்வொரு மனிதருடைய வாழ்விலும் தன்னம்பிக்கை என்பது ஒரு மிகப்பெரிய இடத்தைப் பிடித்துள்ளது.
ஏனென்றால் ஒரு சிறிய விஷயத்தை எடுத்தாலும் கூட தன்னம்பிக்கை என்ற ஒன்று இல்லை என்றால், அவர்களால் அந்த விஷயத்தை சரிவர செய்ய இயலாது.
யானையின் பலமே அதன் தும்பிக்கையில் தான் உள்ளது அதைப்போல மனிதரின் பலமோ அவர்களின் நம்பிக்கையில் தான் உள்ளது.
"முதலில் நீங்கள் உங்களை நம்ப வேண்டும். ஒரு சிலருக்கு தன்னம்பிக்கை இயல்பிலேயே இருக்கும் இதற்கு அவர்கள் வாழும் சூழலும் அவர்கள் பழகும் மனிதர்களும் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
ஆனால், ஒரு சிலருக்கு அவ்வாறான நேர்மறையான சூழல் கிடைப்பதில்லை. இதனால் அவர்களுக்குள் தன்னம்பிக்கையும் வளராமல் இருக்கலாம்.
அப்படி, தனக்கு தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என நினைப்பவர்கள் முக்கியமாக விடயங்களை பின்பற்ற வேண்டும். அவ்வாறான விடயங்கள் தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம்.
தன்னம்பிக்கை அதிகரிக்க...
தன்னம்பிக்கை என்பது யாரும் நமக்கு வழங்கும் விடயம் அல்ல. அதை நாமே தான் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
நம்மில் சிலர் தன்னம்பிக்கையின்மை மற்றும் தாழ்வு மனப்பான்மையுடன் வளர்ந்திருப்போம். இது, பெரும்பாலான சமயங்களில் நமது குழந்தைப்பருவத்தில் ஏற்பட்ட தாக்கமாகவே இருக்கும்.
தன்னம்பிக்கையோடு உணர்வதற்கு நீங்கள், உங்களது வார்த்தைகளை நம்பிக்கையோடு உபயோகிக்க வேண்டும்.
தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும் என்றால் ‘எனக்கு தெரியவில்லை, என்னால் முடியாது' போன்ற வார்த்தைகளை உபயோகப்படுத்துவதை முதலில் முற்றாக கைவிட வேண்டும்.
மாறாக, ‘எனக்கு தெரியும், என்னால் முடியும்’ போன்ற வார்த்தைகளை அதிகமாக பயன்படுத்த வேண்டும்.
நீங்கள் உங்களுடன் பேசிக்கொள்ளும் போதும் சரி, வெளியில் பிறரிடம் பேசும் போதும் சரி நம்பிக்கையோடு பேசுவதை வழக்கமாக்கிக் கொண்டால், எளிதில் நீங்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள முடியும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |