இருமல், காய்ச்சலை விரட்டியடிப்பது எப்படி? பெண்கள் கண்டிப்பாக தெரிஞ்சிக்கோங்க!
பொதுவாக சிலருக்கு பருவ காலங்கள் மாறும் பொழுது உடலில் ஏகப்பட்ட பிரச்சினைகள் ஏற்படுகின்றது.
அதாவது காய்ச்சல், தலைவலி, முகத்தில் பருக்கள், அதிகமாக சூடு உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படும்.
இவற்றை தவிர்க்க பருவகால மாற்றத்தின் போது ஒருசில விஷயங்களை கவனத்தில் கொண்டு பின்பற்ற வேண்டும்.
அத்துடன் சளி, இருமல் வந்தால் மருத்துவமனைக்கு செல்லும் முன்னர் என்னென்ன விடயங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதனை தொடர்ந்து பார்க்கலாம்.
ஆஸ்துமா ஒவ்வாமையிலிருந்து தப்பிக்க வழிகள்
Image- everydayhealth
1. பருவ மாற்றங்களின் போது சூழல் மாசடைவதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றன. ஆகவே சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்.
2. வீட்டிற்குள் தரை விரிப்புகள் மற்றும் மரச்சாமான்களை அகற்றி சுத்தம் செய்ய வேண்டும்.
3. குழந்தைகளின் அறையில் அடைந்து வைத்திருக்கும் பொம்மைகளை அகற்றுவது போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.
4. படுக்கை விரிப்புகள். திரைச்சிலைகள் ஆகியவற்றை வெந்நீரில் நனைத்து வாரத்திற்கு ஒருமுறையாவது சுத்தப்படுத்த வேண்டும்.
5. கோடை காலத்தில் அதிகமாக ஏ.சி இயந்திரங்களை பயன்படுத்துவோம். அதனை சுத்தம் செய்வது அவசியம். மின்விசிறி இருந்தால் அவற்றையும் சுத்தம் செய்ய வேண்டும்.
மேற்குறிப்பிட்ட இடங்களில் சுத்தமாக வைத்திருந்தால் வீட்டினுள் ஏற்படும் மூச்சுத்திணறல்களை தடுக்கலாம்.
இருமல், சளி இருந்தால் செய்ய வேண்டியவை
1. உணவில் உப்பின் அளவை குறைத்து சாப்பிட வேண்டும்.
2. பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், மீன் ஆகியவற்றை தினசரி உணவில் கொள்ள வேண்டும்.
3. பருவகாலத்திலும் தினமும் காலையில் கிரீன் டீ பருகலாம். இதனால் இரத்தயோட்டம் சீராகும்.
4. மஞ்சள், ஆரஞ்சு நிற காய்கறிகள். கீரைகள், முட்டைக்கோஸ், கேரட், வெங்காயம், பூண்டு, இஞ்சி ஆகிய பொருட்களை உணவில் கட்டாயமாக சேர்த்து கொள்ள வேண்டும். ஏனெனின் இவற்றில் ஆன்டி ஹிஸ்டமின்கள் அதிகமாகவுள்ளது.
5. மசாலா பொருட்கள், காரமான உணவுகள், காபி, பால் பொருட்கள், சாக்லெட் வேர்க்கடலை, சிவப்பு இறைச்சி, சர்க்கரை, கோதுமை ஆகிய பொருட்களை முடிந்தவரை கட்டுபாட்டில் வைத்து கொள்ளவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |