வெறும் 10 நிமிடத்தில் வாழைப்பூவை எப்படி சுத்தம் செய்யலாம்? கைகளில் கறையும் படியாதாம்
வாழைப்பூவை சுலபமாக சுத்தம் செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
வாழைப்பூ
வாழைப்பூவை வாரத்திற்கு ஒருமுறையாவது கட்டாயம் சாப்பிட வேண்டும். உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது மட்டுமில்லாமல் ரத்த சோகை பிரச்சனையை விரைவில் குணமாக்கும்.
வாழை பூவே பொறியலாக செய்து சாப்பிட்டால் நீரிழிவு பிரச்சினைகளுக்கு ரொம்பவே நல்லதாம்.
ஆனால், இன்றைய காலகட்டத்தில் பலர் வாழைப்பூவை உணவில் சேர்ப்பதில்லை. காரணம் இதை ஆய்வதற்கு அதிக நேரம் எடுக்கும் என்பதால் இதனை ஒதுக்கி வைத்து விடுகின்றனர்.
இன்றைய இளம் பெண்களுக்கு வாழைப்பூவை எவ்வாறு சுத்தம் செய்வது என்பது கூட தெரியாமல் இருக்கின்றது. மேலும் வாழைப்பூவை அரிந்தால் கைகளில் கறை படிந்து விடும். இதனால் பல பெண்கள் அதை வாங்க விரும்புவதில்லை.
அதனால் இந்த கட்டுரையில், கைகளில் கறை ஏதும் படியாமல் வாழைப்பூவை சுலபமாக சுத்தம் செய்வது பற்றி தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
மோர் - 2 ஸ்பூன்
எண்ணெய் அல்லது உப்பு - தேவையான அளவு (கைகளில் தடவ)
சுத்தம் செய்யும் முறை:
முதலில் வாழைப்பூவை சுத்தம் செய்யும் முன்பு எண்ணெய் அல்லது உப்பு இவற்றில் ஒன்றினை நன்றாக கைகளில் தடவிக்கொள்ளவும்.
பின்பு, வாழைப்பூவை எடுத்து அதன் ஒவ்வொரு இதழையும் தனித்தனியாக பிரித்து எடுக்கவும். பிறகு வாழைப்பூவை மெல்லமாக எடுத்து அதன் முனையினை கையால் தீட்டினால் பூக்கள் மலரும்.
பூக்கள் ஒவ்வொன்றிலும் நரம்பு இருப்பதால், அதை எடுத்து விடுவது நல்லது. ஏனென்றால், அதை வேக வைத்தாலும் வேகாது சாப்பிட்டாலும் வயிற்றுக்கு நல்லதல்ல.
மேலும், இந்த நரம்பை நீங்கள் வாழைப்பூ வெள்ளை கலர் வரும் வரை தான் எடுக்கவும். வாழைப்பூவின் நுனிப்பகுதியில் நரம்புகள் இருப்பதில்லை.
நடு நரம்பிற்கு அருகில் ரப்பர் போன்ற மற்றொரு இதழ் இருக்கும் அவற்றையும் நீக்கி விடுங்கள். இவ்வாறு வாழைப்பூவை சுத்தம் செய்து முடித்த பின்பு அரிந்து மோர் கலந்த நீரில் போட்டு நன்றாக கழுவி சமைக்கலாம்.
வாழைப்பூவை கை பார்க்கும் முன்பு கைகளில் எண்ணெய் தடவினால் கைகளில் கரை படியாது. மேலும் மோர் தண்ணீரில் பூவை போட்டால் கருகாமல் ப்ரஷாகவே இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |