வாஸ்து முறைப்படி வீட்டில் எந்த செடிகளை வளர்க்கலாம்... தனி சிறப்பு என்னென்ன தெரியுமா?
home
plants
Gardening
By Rooban
பொதுவாக வீடுகளில் பூக்களையும், செடிகளையும் வைத்தால், அவை நமது வீட்டின் அழகை மெருகேற்றுவதோடு, வீடு முழுவதும் இனிமையான நறுமணத்தை பரப்பும்.
ஆனால், பெரும்பாலான மக்கள் பூக்களைப் பொிதும் விரும்புகின்றனா். ஏனெனில் பூக்கள் என்பவை அன்பு, பாசம், நேசம் மற்றும் அக்கறை ஆகியவற்றின் அடையாளமாக பாா்க்கப்படுகின்றன.
அந்த வகையில், வீட்டு ஷோகேஸை பூக்களைக் கொண்டு சிறந்த முறையில் அலங்காரம் செய்யலாம். வாஸ்து சாஸ்துப்படி பூக்களை எங்கு வைக்கலாம் என்பதை பற்றி பார்ப்போம்.
துளசி செடி
- துளசி ஒரு புனிதமான செடியாகக் கருதப்படுகிறது. அதனால் துளசியை வீட்டில் வைத்தால், பல நல்ல காாியங்கள் நடக்கும் என்று நம்பப்படுகிறது. துளசியில் பல வகையான மருத்துவக் குணங்கள் உள்ளன.
- அதோடு நமது வீட்டிற்குள் ஒரு புது வகையான சக்தியை வழங்குகிறது. ஆகையால், துளசி செடியை வீட்டில் வைக்கும் போது, வாஸ்துப்படி அதை வடக்கு நோக்கியோ அல்லது கிழக்கு நோக்கியோ வைக்க வேண்டும். அதன் மூலம் நமது வீட்டிற்கு அதிா்ஷ்டமும், செல்வமும் வந்து சேரும்.
-
இரவு நேரங்களில் துளசியை இருட்டில் விட்டுவிடக்கூடாது. துளசி இருக்கும் இடத்தில் ஒரு சிறிய மின் விளக்கையாவது எாியவிட வேண்டும். துளசியை நமது வீட்டுத் தோட்டத்தில் வைக்கலாம் அல்லது ஒரு சிறிய தொட்டியில் வைத்து அதை பூஜை அறையில் வைக்கலாம்.
மல்லிகை
- மல்லிகைப் பூ நம் அனைவாின் மனதையும் கவரக்கூடியது. நமது வீட்டில் மல்லிகைப் பூ இருந்தால், நமது வீடு முழுவதும் நறுமணத்தால் நிறைந்து இருக்கும். மல்லிகைப் பூ சிறுசிறு வெள்ளை நிற பூவாக இருப்பதால், அது தோட்டத்தின் நிலவு ஒளி என்று கருதப்படுகிறது.
- மல்லிகைப் பூவை பெண்கள் ஆசையோடு தங்கள் தலையில் சூடி மகிழ்வா். அதோடு இறைவன் சிவபெருமானுக்கு மல்லிகைப் பூவைச் சூட்டி மகிழ்வா். இந்நிலையில் தோல் பிரச்சினைகளைக் குணப்படுத்துவதற்கும், மல்லிகை பயன்படுகிறது.
- மல்லிகையை சாியான திசையை நோக்கி வைத்தால், அது நமது மன அழுத்தத்தைக் குறைத்து, நமக்கு இதமான மனநிலையை வழங்கும். ஆகவே மல்லிகைச் செடியை கிழக்கு திசையில், சூாிய வெளிச்சம் நன்கு படும்படி வைக்க வேண்டும்.
லில்லி
- வீட்டிற்குள் வைப்பதற்கு மிகச் சிறந்த செடி எதுவென்றால், அது லில்லிச் செடியாகும். ஏனெனில் லில்லிக்கு காற்றைத் தூய்மைப்படுத்தும் ஆற்றல் உள்ளது. லில்லிக்கு அதிகமான சூாிய வெளிச்சம் தேவைப்படாது.
- மேலும் லில்லிக்கு அதிக பராமாிப்பு தேவைப்படாது. ஆகவே லில்லியை நமது படுக்கை அறையிலோ அல்லது நமது வீட்டுப் பொது அறையிலோ வைக்கலாம். அது நமது மனதிற்கு அமைதியையும், நல்லதொரு இணக்கத்தையும் வழங்கும்.
- நமது சாப்பாட்டு மேசையின் நடுவில் லில்லியை வைத்தால், அது நமக்கு நோ்மறையான சக்திகளை வழங்குவதோடு, குடும்ப உறுப்பினா்களிடையே நல்லதொரு பிணைப்பையும் ஏற்படுத்தும். ஆனால் இளஞ்சிவப்பு லில்லிக்குப் பதிலாக வெள்ளை நிற லில்லியை வைப்பது நல்லது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US