கீரை சமைக்கும் போது இந்த தவறை செய்யாதீங்க..
பொதுவாக கீரையில் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் உள்ள நிலையில், பலரும் அதிகமாக சேர்த்துக் கொள்வதில்லை. கீரையை குறித்து ஆயுர்வேதம் என்ன சொல்கின்றது என்பதை தெரிந்து கொள்வோம்.
ஆயுர்வேதம் சொல்லும் காரணம்:
ஆயுர்வேத முறைப்படி கீரையை சரியான முறையில் சமைத்து சாப்பிட்டதால் முழு பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
ஆனால் கீரையை அதிகமாக சாப்பிட்டால் வாயு, அமிலத்தன்மை, வீக்கம் இவைகள் ஏற்படுவதுடன் உடம்பிற்குள் நச்சுக்களும் அதிகரிக்கின்றது. அடிக்கடி மூட்டுவலி, செரிமானம், கல்லீரல், தோல், சுவாச அமைப்பு போன்ற பிரச்சினையையும் ஏற்படுத்துகின்றது.
வாத பண்புகளைக் கொண்ட கீரையை மிதமாக உட்கொள்வது மிகவும் சிறந்தது. அதுமட்டுமின்றி கீரையை நல்ல முறையில் சுத்தம் செய்த பின்பே சமைக்க வேண்டுமாம்.
கீரையை எப்படி சமைக்கு வேண்டும்
கீரையை சமைப்பதற்கு முன்பு 3 அல்லது 4 நிமிடங்கள் தண்ணீரில் நன்கு கழுவிவிட்டு, பின்பு வடிகட்டி, சாதாரண வெப்பநிலையில் கீரையை பரப்பி வைக்கவும்.
சற்று உலர்ந்ததும் கீரையின் தண்டை அகற்றி, சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
பின்பு பாத்திரம் ஒன்றில் தண்ணீர் ஊற்றி சுடு செய்த பின்பு நறுக்கிய கீரையை போட்டு 10 நிமிடங்கள் அப்படியே விட்டுவிடவும்.
கீரையில் நச்சு மற்றும் வாத தாக்கத்தினை குறைப்பதற்கு மஞ்சள், திப்பிலி, சீரகம், கொத்தமல்லி இலை, வெந்தய இலை போன்ற மசாலாவைச சேர்த்துக் கொள்ளலாம்.
எனவே, கீரை சாப்பிடுவதற்கு முன் அவற்றை நன்றாக சமைப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |