இரத்தப் புற்றுநோய் ஆரம்பநிலை அறிகுறிகள் எப்படி இருக்கும் பார்த்துருகீங்களா?
பொதுவாக தற்போது அதிகமானவர்களை தாக்கும் நோய்களில் புற்றுநோய் முதல் இடத்தை பிடிக்கின்றது.
அந்த வகையில் புற்றுநோய்கள் அதன் தாக்கத்தின் அடிப்படையில் பல வகைகளாக பிரிக்கப்படுகின்றன.
இந்த கூற்றின் படி புற்றுநோய் வகைகளில் இரத்த புற்றுநோயும் அடங்குகின்றது.
அதாவது நமது உடலில் இரத்தம் மற்றும் எலும்பு மஜ்ஜையில் உருவாகி, இரத்தசெல்களின் உற்பத்தியையும், செயல்பாட்டையும் பாதிக்கின்றன இது தான் “இரத்த புற்றுநோய்” என அழைக்கப்படுகின்றது.
இந்த நோயை எப்படி ஆரம்ப காலங்களில் கண்டறியலாம் என மருத்துவ ஆய்வுகள் விளக்கம் கொடுத்துள்ளது. இந்த விளக்கத்தை தான் தொடர்ந்து பார்க்க போகிறோம்.
இரத்தப் புற்றுநோய்களின் வகைகள்
1. லுகேமியா (இரத்த வெள்ளை அணுக்கள் மிகைப்பு)
2. லிம்போமா (நிணநீர் சுரப்பி புற்றுநோய்)
3. மைலோமா (சோற்றுப்புற்று)
நோயை எப்படி கண்டறிவது?
1. இரத்த பரிசோதனை செய்ய வேண்டும்.
அதாவது இரத்த செல்களின் எண்ணிக்கைகள், குறிப்பிட்ட குறியீடுகள் மற்றும் இரத்தப் புற்றுநோய்களுடன் தொடர்புடைய மரபியல் பிறழ்வுகள் ஆகியவற்றை மருத்துவர்களின் ஆலோசனையுடன் பரிசோதிக்க வேண்டும்.
2. எலும்பு மஜ்ஜை உறிஞ்சியெடுப்பு மற்றும் திசு பகுப்பாய்வு
3. இமேஜிங் சோதனைகள்
4. மரபணு பரிசோதனை
இரத்த புற்றுநோயின் அறிகுறிகள்
- பலவீனம்
- பசியிழப்பு
- சோர்வு
- குளிர்ச்சியுடன் காய்ச்சல்
- தற்செயலாக எடை இழப்பு
- உடல் வலிகள்
- இரவு வியர்வுகள்
- தலைவலி
- மூச்சுவிட அடிவயிற்றில் வலி
- தோலில் அரிப்பு
- வீங்கிய நிணநீர் முனைகள்
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |