யூரிக் அமிலத்தால் அவதிப்படுறீங்களா? அப்போ இதையெல்லாம் கட்டாயம் கடைப்பிடிங்க
யூரிக் அமிலம் எனப்படுவது ரத்ததில் சேரும் கழிவுப் பொருளாகும். பியூரின்கள் பொருட்களை உடல் உடைக்கும் போது உருவாகும் ஒரு ரசாயனமாகும்.
பியூரின்கள் உடலில் தானாக உற்பத்தியாகும். இதை தவிர சில உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்ளும் போதும் உடலில் யூரிக் அமிலத்தின் அளவு கணிசமாக அதிகரிக்கும். பொதுவாக சிறுநீரகங்களால் யூரிக் அமிலம் வடிகட்டப்படுகிறது.
இருப்பினும், ப்யூரின் நிறைந்த உணவுகளை அதிகமாக உட்கொள்வது இரத்த ஓட்டத்தில் யூரிக் அமிலம் குவிவதற்கு வழிவகுக்கும்.
உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகமாகும் போது சிறுநீரகத்தால் வடிகட்ட முடியாமல் போகும் நிலை உருவாகும், இதனால் பல சிக்கல்கள் உண்டாகலாம்.
இரத்தத்தில் அதிக யூரிக் அமிலம் கீல்வாதம் மற்றும் சிறுநீரக கற்களை ஏற்படுத்துகிறது. பின் இவற்றின் காரணமாக மூட்டுவலி, வீக்கம், குமட்டல், வாந்தி, அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீரில் ரத்தம் கசிதல், முதுகில் வலி, எழுந்து உட்காருவதில் சிரமம் போன்ற அறிகுறிகள் தோன்றும்.
யூரிக் அமிலத்தின் கூறுகளை எளிமையாக உடைத்து சிறுநீரின் மூலம் வெளியேற்றுவதற்கு எந்தெந்த உணவுகள் துணைப்புரியும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
எந்த உணவுகள் தீர்வு கொடுக்கும்?
தினசரி உணவில் நெல்லிக்காயை சேர்த்துக்கொள்வதன் மூலம் யூரிக் அமிலம் பிரச்சினைக்கு சிறந்த தீர்வை பெறலாம்.
வைட்டமின் சி நிறைந்து காணப்படும் நெல்லிக்காயை தினமும் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் அல்லது தினமும் ஜூஸ் செய்து குடிப்பதால் யூரிக் அமிலத்தின் அளவை குறைத்து உடலில் ஏற்படும் வீக்கம் மற்றும் வலியை தடுக்க துணைப்புரிகின்றது.
தினசரி செலரி சாப்பிடுவதால் யூரிக் அமில அளவை எளிமையாக கட்டுக்குள் கொண்டுவந்துவிடலாம்.
எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி, தர்ப்பூசணி போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்களை தினமும் சாப்பிடுவது யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கின்றது.
மேலும் நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை திகசரி சாப்பிட வேண்டியது அவசியம்.
பாதாம், முந்திரி போன்ற நட்ஸ் வகைகள், கீரைகள் , சிறுதானிய உணவுகள் தினமும் எடுத்து கொள்வது யூரிக் அமலத்தை கட்டுக்குள் வைக்க உதவும்.
அதனோடு தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டியதும் அவசியமாகும். இது யூரிக் அமிலத்தை குறைப்பது மட்டுமின்றி, சிறுநீரகங்கள் சீராக இயங்குவதற்கும் துணைப்புரிகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |