Washing machine பயன்படுத்துறீங்களா? அப்போ இதையெல்லாம் கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க
தற்காலத்தில் கைகளால் துணிதுவைப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் அருகிவரும் நிலையில் வாஷிங் மிசின் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது.
கிட்டத்தட்ட அனைவரது வீடுகளிலும் வாஷிங் மெஷின் ஒரு அத்தியாவசிய சாதனமாக மாறிவிட்டது. இந்நிலையில், நாம் அடிக்கடி பயன்படுத்துவதாலும் அதில் சில பிரச்சனைகள் ஏற்படும்.
வாஷிங் மெஷின் பயன்படுத்தும் போது பொதுவாகவே பலரும் செய்யும் தவறுகள் தொடர்பிலும் கவனிக்க வேண்டிய விடயங்கள் தொடர்பிலும் இந்த பதிவில் பார்க்கலாம்.
கவனிக்க வேண்டிய விடயங்கள்
ஒவ்வொரு துணிக்கும் ஒவ்வொரு தன்மை உண்டு. அதற்கேற்றபடி துவைக் வேண்டும். துணிகள் மிகவும் அழுக்காக இல்லாவிட்டால் வெப்பநிலையை குறைந்த அளவு பயன்படுத்துவது நல்லது.
உள்ளாடைகள் மற்றும் துண்டுகள் போன்ற பொருட்களில் அதிக பாக்டீரியா இருக்கும். அவற்றை சுத்தம் செய்ய குறைந்தபட்சம் 60 டிகிரி வெப்பநிலை தேவைப்படுகிறது.
மற்ற துணிகளுக்கு 20 முதல் 30 டிகிரி வெப்பநிலை இருந்தால் போதுமானது. துணி துவைக்கும் பவுடரில் பெரும்பாலும் ப்ளீச் உள்ளது. இவை வெள்ளை ஆடைகளுக்கு சிறந்தது, அதே நேரத்தில் லிக்குவிட் வண்ணங்கள் நிறைந்த ஆடைகளுக்கு சிறந்தது.
துணிகளில் அதிகம் சாயம் போகாமல் இருக்க துணிகளுக்கு ஏற்றவாறு பயன்படுத்தவும். துணியில் ஜிப், பட்டன்கள் இருந்தால் கவனம் துணிகளை துவைக்க மெஷினில் போடுவதற்கு முன்பு அவற்றில் அதிக ஜிப் மற்றும் பட்டன்கள் இருக்கிறதா என்பதை சரி பார்க்க வேண்டியது அவசியம்.
பட்டன்கள் மிஷனில் சிக்க வாய்ப்பு உண்டு அல்லது மற்ற துணிகளில் சிக்கி கொள்ள வாய்ப்பு உள்ளது. எனவே மற்ற துணிகளை சேதப்படுத்தாமல் இருக்க ஜீன்ஸ் துணிகளை மெஷினில் போடும் போது மென்மையான துணிகளை சேர்த்து போடாமல் இருப்பது நல்லது.
பெட்சீட் மற்றும் தலையணைகளை துவைக்கவும் ஒவ்வொரு பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை பெட்ஜீட் மற்றும் தலையணைகள் துவைக்கலாம்.
வாஷிங் மெஷின் ட்ரையரை துணிகளுக்கு அதிகம் பயன்படுத்தாமல் இருப்பது துணிகளின் ஆயுள் காலத்தை அதிகப்படுத்தும்.
அடிக்கடி ட்ரையர் பயன்படுத்தினால் துணியின் தன்மை பாதிக்கும். மெஷினில் துணி துவைக்கும் போது குறித்த விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |