செல்போனுக்கு அடிமையாகும் குடும்பத்தினர்.... வெளிவருவது எப்படி?
பொதுவாகவே தற்காலத்தில் செல்போன் இல்லாத வாழ்க்கையை நம்மில் பலரால் கற்பனை கூட செய்ய முடியாது.
அந்தளவிற்கு செல்போன் நம் வாழ்வில் ஓர் தவிர்க்க முடியாத அங்கமாக மாறிவிட்டது என்தே உண்மை.
ஆனால் அதன் அதிகரித்த பாவனை உடல் ஆரோக்கியத்திற்கும் உள ஆரோக்கியத்திற்கும் ஏற்படுத்தும் பாதக விளைவுகள் குறித்து பலரும் சிந்திப்பதில்லை.
அந்தவகையில் செல்போன் கதிர்வீச்சு புற்றுநோய் போன்ற அகாயகரமான விளைவுகளை ஏற்படுத்தும் வாய்ப்பு இருப்பதாகவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
அதிகமாக செல்போன் பயன்படுத்துவது உடல் ரீதியாக ஏற்படுத்தும் தாக்கத்தை பார்க்கிலும் மன ரீதியாக பாரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.
தற்காலத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் கைகளிலும் செல்போன் கட்டாயம் இருக்கும் நிலை வந்துவிட்டது.
உலக சனத்தொகையில் 3.8 மில்லியன் பேர் செல்போனிற்கு அடிமையாக இருப்பதாக ஆய்வுகள் மூலம் தெரியவருகின்றது.
எண்ணில் அடங்கா சமூக வலைதளங்களின் பெருக்கம் காரணமாக நமக்கே தெரியாமல் ஒரு நாள் முழுவதும் கூட மெய் மறந்து செல்போனில் திளைத்திருக்கின்றோம். இது நமது பொன்னான நேரத்தை நம்மை அறியாமலேயே திருடிக்கொண்டிருக்கின்றது.
நாம் செல்போனுக்கு அடிமையாகிவிட்டோம் என்பதை நாம் கண்டுப்பிடித்தால் தான் அதிலிருந்து வெளிவருது பற்றி நமது மனம் சிந்திக்க ஆரம்பிக்கும். இது தொடர்பில் இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம்.
கண்டுபிடிப்பது எப்படி?
செல்போன் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் தீவிரமாக தோன்றுவது.
செல்போனை பயன்படுத்தாமல் இருக்கும் போதும் போன் தூரமாக இருக்கும் போதும் பதட்டத்தை உணர்வது.
நீண்ட நேரம் செல்போன் பயன்படுத்துவது. கண்கள் சோர்வடைந்து தூக்கம் வரும் போதும் கூட செல்போன் பாவனையை நிறுத்த முடியாமல் இருப்பது.
முக்கியமாக செய்ய வேண்டிய பொறுப்புகள் இருக்கும் போது கூட சமூக வளைத்தளங்களுக்குள் சென்றுவிட்டால் வெளிவர முடியாத நிலையில் இருப்பது.
தூக்கத்தில் இருந்தால் கூட Notification சத்தம் கேட்ட உடன் விழித்துக்கொள்ளும் நிலை இது போன்ற அறிகுறிகள் நீங்கள் செல்போனுக்கு அடிமையாகிவிட்டதை உணர்த்துகின்றது.
இதிலிருந்து வெளிவருவது எப்படி?
வெவ்வேறு ஆப்களில் இருந்து வரும் Notification களை உங்கள் போன் செட்டிங்ஸிற்கு சென்று ஆஃப் செய்து வைப்பது சிறந்த தீர்வு கொடுக்கும்.
மற்ற வேலைகளுக்கு குறிப்பிட்ட நேரத்தை மாத்திரம் செலவிடுவது போன்று செல்போனில் பொழுது போக்கு விடயங்களுக்கும் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குவது.
இரவில் படுக்கைக்கு செல்லும் போது செல்போனை தூரமாக வைத்துவிட்டு வருவது. எந்த காரணத்துக்காகவும் தூங்கும் நேரத்தை வேறு விடயங்களுக்கு செலவிட கூடாது என உங்களுக்கு நீங்களே கட்டளையிட்டு கொள்ளலாம்.
உடற்பயிற்சியில் ஈடுபடுவது அல்லது இசை கருவிகளை வாசிக்க கற்றுக்கொள்வது போன்று வேறு பயன் தர கூடிய விடயங்களில் கவனத்தை திசைத்திருப்பலாம்.
அப்படியும் இந்த பிரச்சினையில் இருந்து வெளிவர முடியாவிடில் மன நல ஆலோசகரிடம் சென்று இதற்கு தீர்வை பெறலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |