குளிர்காலத்தில் ஆஸ்துமாவை சமாளிக்க... இதையெல்லாம் கட்டாயம் பாலோ பண்ணுங்க
பொதுவாகவே வாழ்க்கை முறையின் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக பல நகரங்களில் காற்றில் தூசு துகள்கள் கலந்து மாசுபாடு நிறைந்து காணப்படுகிறது.
இந்த தூசியில் உள்ள சிறு துகளை சுவாசிப்பதால் தூண்டப்படும் விளைவினால் ஒவ்வாமை ஏற்படுகிறது.
வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை மற்றும் சிகரெட் புகை என பல வகைகளில் வெளியாகும் புகையின் காரணமாகவும் ஒருவருக்கு ஆஸ்துமா ஏற்படுகிறது.
ஆஸ்துமா
ஆஸ்துமா என்பது சுவாச பிரச்சனை. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுவாசக் குழாயில் வீக்கம் மற்றும் அடைப்பு ஏற்படுகிறது.ஆஸ்துமா நோயாளிகள் பொதுவாக குளிர்காலத்தில் இந்த அறிகுறிகளுடன் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்.
ஆஸ்துமாவுக்கு நிரந்தர தீர்வு இல்லை. தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் கட்டுப்படுத்தலாம். எனவே ஆஸ்துமா நோயாளிகள் குளிர் காலத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
ஆஸ்துமா நோயாளிகள் சில அடிப்படை நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் குளிர்காலத்தில் துன்பத்தைத் தவிர்க்கலாம். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
தவிர்க்க வேண்டிய விடயங்கள் புகைபிடித்தல் ஆஸ்துமாவை மோசமாக்கும். புகைபிடிப்பதால் தொண்டையில் சளி சேரும். இதனால் ஆஸ்துமா நோயாளிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே ஆஸ்துமா நோயாளிகள் புகைபிடிப்பதை தவிர்க்க வேண்டும்.
ஆஸ்துமா நோயாளிகள் மாசுபாட்டால் பாதிக்கப்படக்கூடாது. ஆனால் வெளியே செல்லாமல் இருப்பது கடினம். ஆஸ்துமா நோயாளிகள் கூடுமானவரை வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். வீட்டில் வேலை செய்வது ஆஸ்துமா நோயாளிகளுக்கு நல்லது.
வெளியே செல்ல நேரிட்டால், முக கவசம் பயன்பத்த வேண்டியது அவசியம். அதிக அளவில் தூசி, அழுக்கு, மண் துகள்கள் உள்ள சூழலில் வாழவோ, ரசாயனங்கள், குப்பைகள் எரிக்கப்படும் போது அவ்வாறான இடங்களுக்குச் செல்லவோ கூடாது.
வீட்டை சுத்தமாக வைத்திருங்கள். போர்வைகள் மற்றும் ஸ்வெட்டர்களில் உள்ள தூசுகளும் ஆஸ்துமா பிரச்சனைகளை அதிகரிக்கும். எனவே இந்த பொருட்களை முடிந்தவரை சுத்தமாக வைத்திருங்கள்.
ஆஸ்துமா நோயாளிகள் தங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தினமும் காலையில் நடைப்பயிற்சி அல்லது யோகா செய்வது பயனுள்ளதாக இருக்கும். ஆஸ்துமா நோயாளிகள் தங்கள் மருந்துகளை தினமும் தவறாமல் எடுத்துக்கொள்வது முக்கியம்.
ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள் மருந்துகளை உட்கொள்ளாமல் இருந்தால், பிரச்சனை அதிகரிக்கும். எந்தவொரு அவசரநிலையையும் சமாளிக்க எப்போதும் இன்ஹேலரை எடுத்துச் செல்லுங்கள்.
நீங்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டியிருந்தால், எப்போதும் ஒரு இன்ஹேலரை உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள். குறைவாக தூங்குபவர்களுக்கு ஆஸ்துமா 1.5 மடங்கு அதிகமாகும்.
எனவே ஆஸ்துமா நோயாளிகள் 7-8 மணி நேரம் போதுமான அளவு தூங்க வேண்டும். இதனால் ஆஸ்துமா நோயாளிகள் குளிர்காலத்தில் நோயின் வீரியத்தை கட்டுக்குள் வைக்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |