சிறிய விஷயத்துக்கும் அதிகமா கோபம் வருதா? கட்டுப்படுத்துவது எப்படி?
பொதுவாகவே மனிதர்களுக்கு கோபம் ஏற்படுவது மிகவும் இயல்பான விடயம் தான். மனிதர்கள் மட்டுமன்றி சில விலங்குகளுக்கும் கூட கோபம் வருவது வழக்கம்.
உளவியல் ரீதியாக நமது மனம் ஏற்றுக்கொள்ளாத மனதிற்கு பிடிக்காத விடயங்கள் நடக்கும் போது கோபம் ஏற்படுகின்றது.
இது இயற்கையான விடயம் என்றாலும் குறிப்பிட் சிலர் சின்ன சின்ன விடயங்களுக்கும் அதிகமாக கோபப்படுபவர்கள். இந்த கோபம் உடல்,உள ரீதியில் பாரிய பாதிப்பை ஏற்படுத்துவதுவது மட்டுமன்றி பல நேரங்களில் உறவுகளை இழப்பதற்கும் காரணமாகிவிடுகின்றது.
இவ்வாறு நம்மை அறியாமலே நமக்கு எதிரியாக இருக்கும் கோபத்தை கட்டுக்குள் வைக்ககூடிய சில எளிமையான முறைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
கோபத்தை எப்படி கட்டுப்படுத்துவது?
பொதுவாக கோபம் ஏற்படுவதற்கான பிரதான காரணம் மன அழுத்தம் தான்.எனவே கோபத்தை கட்டுக்குள் வைக்க வேண்டும் என்றால் முதலில் மன அழுத்தத்தில் இருந்து விடுபட முயற்சிக்க வேண்டும்.
மனஅழுத்தம் என்பது அதிகரித்த வேலைப்பளு, உடல்நல பிரச்சினைகள், போதிய தூக்கமின்மை, அதிகரித்த சமூக வலைத்தளங்களின் பாவனை போன்ற காரணங்களால் மாத்திரமன்றி நெருக்கமானவர்களில் ஏற்படும் திடீர் மாற்றங்களால் கூட ஏற்படலாம்.
நமக்கு நெருக்கமாகவர்கள் நமது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாத பட்டசத்தில் மன அழுத்தம் அதிகமாகும். இதன் காரணமாக குறித்த நபரின் மீது அதிக கோபம் ஏற்படுகின்றது.
கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்றால் முதலில் கோபம் ஏற்படுவதற்கான மூலத்தை கண்டுப்பிடிக்க வேண்டும்.
மற்றவர்களின் மீது எதிர்பார்ப்பு இல்லாத போது அவர்களின் எந்த நடத்தையும் உங்களை பாதிப்பதில்லை. எனவே எதிர்பார்ப்புகளை குறைத்துக்கொண்டால் கோபம் தானாக குறைய ஆரம்பிக்கும்.
கோபத்தை கட்டுக்குள் வைக்க உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சி போன்றவற்றில் கவனம் செலுத்துவது நல்ல தீர்வாக அமையும்.
எதற்கெடுத்தாலும் கோபப்படுபவர்கள் மன அழுத்தத்தை குறைக்க யோகா, தியானம், சைக்கிள் ஓட்டுதல் போன்றவற்றில் ஈடுபடலாம். இவற்றைச் செய்வதன் மூலம் மகிழ்ச்சியான ஹார்மோன்கள் அதிகளவில் சுரப்பதனால் கோபம் தானாக கட்டுப்படும்.
மேலும் அதிகமாக கோபம் ஏற்படும் போது அதனை கட்டுப்படுத்துவதை விடவும் வெளிப்படுத்துவதே சிறந்தது.யார் மீது கோபம் ஏற்படுகின்றதோ நேரடியாக அவர்களிடம் வெளிப்படுத்தாமல் தனிமையில் சத்தமிடுவது சில நாட்களில் கோபத்தை முற்றாக இல்லாமல் செய்ய துணைப்புரியும்.
வேலை பார்க்கும் இடங்களில் கோபம் வந்தால் அங்கிருந்த தனிமையான இடத்துக்கு உடனே செல்ல முடியாது எனவே, கோபத்தை கட்டுப்படுத்த ஸ்ட்ரெஸ் பந்தின் உதவியைப் பெறலாம். கோபம் வரும் போதெல்லாம் இந்த பந்தை கைகளால் அழுத்தினால் கோபம் விரைவில் கட்டுப்படும்.
மேலும் அதிக கோபம் ஏற்படும் போது கண்களை மூடிக்கொண்டு ஆழமான மூச்சு பயிற்சி செய்வதும் உடனே கோபத்தை கட்டுப்படுத்த உதவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |