அசிங்கமான மஞ்சள் நிற பற்களை நொடியில் வெள்ளையாக்கனுமா? இந்த சக்தி வாய்ந்த பொருட்கள் போதும்!
மஞ்சள் நிற பற்களை வெள்ளையாக்கும் சக்தி வாய்ந்த இயற்கை வழிகளை இன்று பார்க்கலாம்.
அதற்காக நீங்கள் கோடிக்கணக்கில் செலவு செய்ய வேண்டும் என்று இல்லை.
சமயல் அறையில் உள்ள சில பொருட்கள் மட்டுமே போதும்.
பால் பவுடர்
பால் பவுடர் பற்களை முத்துப் போன்ற நிறத்தில் மாற்ற உதவுவதோடு, ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளும். டூத் பேஸ்ட்டை வைத்து, அதன் மேல் சிறிது பால் பவுடரைத் தூவி பற்களைத் துலக்க வேண்டும்.
இப்படி வாரத்திற்கு ஒன்று முதல் இரண்டு முறை பற்களைத் துலக்க, பற்களில் உள்ள மஞ்சள் கறைகள் நீங்கி, பற்கள் வெள்ளையாக இருக்கும்.
பேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சை சாறு
டூத் பிரஷ்ஷில் ஒரு சிட்டிகை பேக்கிங் சோடாவைத் தூவி, சில துளிகள் எலுமிச்சை சாற்றினை சேர்த்து, பற்களைத் துலக்க வேண்டும்.
இதனால் பற்களில் உள்ள மஞ்சள் கறைகள் விரைவில் நீங்கும். ஆனால் இப்படி வாரத்திற்கு ஒரு முறைக்கு மேல் செய்யக்கூடாது. இல்லாவிட்டால், எனாமல் தேய்ந்துவிடும்.
எலுமிச்சை ஜூஸ் மற்றும் தண்ணீர்
எலுமிச்சை ஜூஸ் மற்றும் தண்ணீரை சரிசம அளவில் கலந்து கொண்டு, அந்நீரால் வாயைக் கொப்பளிக்க வேண்டும். இதனால் பற்களில் உள்ள மஞ்சள் கறைகள் நீங்குவதோடு, பல் சொத்தையாவதும் தடுக்கப்படும்.