ஒரு வாரத்திற்கு கெட்டு போகாத கறிவேப்பிலை மிளகு குழம்பு! காரசாரமான ரெசபி இதோ
நாம் அன்றாடம் செய்யும் உணவுகளில் பொதுவாக மிளகு, கறிவேப்பிலை பயன்படுத்துவது வழக்கம். இவற்றில் உடலுக்கு தேவையான ஏராளமான சத்துக்கள் இருக்கின்றது.
அதிலும் கறிவேப்பிலையில் பல சத்துக்கள் காணப்படுகின்றது. இது இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் மற்றும் அந்தமான் தீவுகளில் பயரிடப்படுகிறது. இந்திய உணவுகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. தற்போது ஆஸ்திரேலியா, பசிபிக் தீவுகள் மற்றும் ஆப்பிரிக்காவிலும் பயிரடப்படுகிறது.
இத்தனை நன்மைகளை அள்ளி வழங்கும் கறிவேப்பிலையடன் கொஞ்சம் பூண்டு மிளகு சேர்த்து ஒரு வாரத்திற்கு கெட்டுப்போகாத குழம்பு எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பூண்டு – 100 கிராம்(தோல் உறித்து எடுத்துக்கொள்ளவேண்டும்)
- மிளகு – ஒரு ஸ்பூன்
- வர மிளகாய் – 2
- வரமல்லி – ஒரு ஸ்பூன்
- கடலை பருப்பு – 2 ஸ்பூன்
- கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி
- புளி – பெரிய நெல்லிக்காய் அளவு
- உப்பு - தேவையான அளவு
- மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
- எண்ணெய் – 100 மில்லி லிட்டர்
- (சூடான தண்ணீரில் ஊறவைத்து கெட்டியான புளிக்கரைசலை எடுத்துக்கொள்ளவேண்டும்)
- தாளிக்க தேவையான பொருட்கள்
- கடுகு – கால் ஸ்பூன்
- உளுந்து – கால் ஸ்பூன்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து அது சூடானவுடன் அதில் வரமிளகாய், வரமல்லி, மிளகு, கறிவேப்பிலை, கடலை பருப்பு சேர்த்து நன்றாக வறுத்துக்கொள்ளவேண்டும்.
கடலைப்பருப்பு பொன்னிறமாகும் வரை இதை வறுத்துக்கொள்ளவேண்டும். இன்னுமொரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து உரித்த பூண்டு சேர்த்து நன்றாக வதக்கி எடுத்துக்கொள்ளவேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து, புளிக்கரைசலை ஊற்றவேண்டும். உப்பு, அரைத்த விழுது, பூண்டு என அனைத்தையும் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவேண்டும்.
பின்னர் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்கவிடவேண்டும். அடுத்து ஒரு தாளிப்பு கரண்டியில், எண்ணெய் சேர்த்து கடுகு, உளுந்து தாளித்து அந்த குழம்பில் மெலால் கொட்ட வேண்டும். இதன் பின்னர் இறக்கினால், சூப்பர் சுவையான பூண்டு, மிளகு, கறிவேப்பிலை குழம்பு தயார்.
இதை சூடான சாதத்தில் நல்லெண்ணெய்விட்டு சாப்பிட சுவை அள்ளும். இது தவிர இத ஒரு வாரத்திற்கு அப்படியே கெட்டுப்போகாமல் இருக்கும். உங்களுக்கு தேவைப்பட்ட நேரத்தில் பயன்படுத்த கண்ணாடி போத்தலில் போட்டு வைத்து கொள்ளவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |