பாத்திரம் கழுவ சோப்பை பயன்படுத்துறீங்களா? இனி இதை ட்ரை பண்ணுங்க
சோப்பு இல்லாமல் பாத்திரங்களை சுத்தமாக எவ்வாறு கழுவுவது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
துணி துவைப்பதற்கு மட்டுமில்லாமல் தற்போது பாத்திரம் கழுவுவதற்கும் சோப்பு மற்றும் திரவங்கள் இருக்கின்றது.
ஆனால் இவற்றில் சில ரசாயனங்கள் இருப்பதால் அலர்ஜி மற்றும் சில நோய்கள் ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இந்நிலையில் எந்தவித பாதிப்பும் வராமல் பாத்திரங்களை எவ்வாறு சுத்தம் செய்வது என்பதை தெரிந்து கொள்வோம்.
பாத்திரம் தேய்க்க இதை பயன்படுத்துங்க...
பாத்திரங்களை முதலில் சூடான நீரில் கழுவிவிட்டு சிறிது பேக்கிங் சோடாவை அதன் மீது தெளித்து, பாத்திரம் கழுவும் ஸ்க்ரப்பர் மூலம் தேய்த்து மீண்டும் வெந்நீரில் கழுவி எடுக்கவும்.
1 கப் வெந்நீர், 2 ஸ்பூன் உப்பு மற்றும் 1 எலுமிச்சை பழ சாறு இவற்றினை கலந்து பாத்திரத்தை தேய்த்தால் சுத்தமாகும்.
பழங்காலத்திலிருந்து பயன்படுத்தப்படும் சாம்பலை பாத்திரம் கழுவ பயன்படுத்தலாம், சாம்பலால் தேய்த்து விட்டு, சூடான நீரில் கழுவவும்.
பாத்திரங்களில் இருக்கும் கிரீஸை அகற்றுவதற்கு கஞ்சி தண்ணீரை பயன்படுத்தலாம். இதில் உள்ள ஸ்டார்ச் மற்றும் சிட்ரிக் அமிலம் பாத்திரத்தினை நன்றாக சுத்தம் செய்கின்றது. அதாவது கஞ்சி தண்ணீரில் பாத்திரத்தை 30 நிமிடம் ஊறவைத்து வெந்நீரில் கழுவ வேண்டும்.
ஒரு கப் தண்ணீரில் 4 அல்லது 5 ஸ்பூன் வினிகர் சேர்த்து ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி, அதை பாத்திம் மீது தெளித்து சிறிது நேரம் கழித்து பாத்திரங்களை கழுப்பினால் பாத்திரம் சுத்தமாகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |