சப்பாத்தி கட்டையில் மாவு அடிக்கடி ஒட்டிக்குதா? அப்போ இத செய்ங்க
தற்போது இரவு மற்றும் காலை வேளைகளில் அநேகமானவர்கள் சப்பாத்தி தான் விரும்பி சாப்பிடுகிறார்கள். ஏனெனின் டயட் பிளான் கடைபிடிப்பவர்களுக்கு நீண்ட நேரம் பசியெடுக்காமல் இருப்பதற்கு சப்பாத்தி உதவிச் செய்கிறது.
சப்பாத்தி ரெடிமேட் கடைகளில் விற்பனை செய்தாலும், சிலர் வீடுகளில் மாவு பிசைந்து செய்து தான் சாப்பிடுவார்கள். ஆனால் தினமும் மாவை பிசைந்து உருட்டுவது சிலருக்கு கடினமாக இருக்கலாம்.
அப்படி இருக்கும் பட்சத்தில் சப்பாத்திக்கு மா பிசைந்து களஞ்சியப்படுத்தி வைத்துக் கொள்வார்கள். இது நாளடைவில் சப்பாத்திக்கு தேய்க்க முடியாமல் பலகையில் ஓட்டிக் கொள்ளும்.
அடிக்கடி பலகையை கழுவி பயன்படுத்தினாலும், பலகையை துடைத்து பயன்படுத்தினாலும் பாக்ரீயாக்களின் தாக்கங்களினால் நோய்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.
அந்த வகையில், சப்பாத்தி மா பலகையில் ஒட்டாமல் எப்படி சப்பாத்திக்கு மா தேய்க்கலாம் என்பதை பதிவில் பார்க்கலாம்.
1. சப்பாத்திக்கு மாவு உருட்டுவது, சுடுவது என்பது மிக எவ்வளவு பழக்கமாக இருந்தாலும் சுத்தமாக கட்டையை வைத்துக் கொள்ள வேண்டும். கட்டையை வெறும் தண்ணீரால் நனைத்து கழுவுவதை தவிர்க்க வேண்டும் என நிபுணர்கள் கூறுகிறார்கள். சில வீடுகளில் கட்டையை துடைத்து பயன்படுத்துவார்கள். இது புதிய நோய்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.
2. சப்பாத்தி உருட்டும் கட்டைகளை ஈரப்பதத்தோடு பயன்படுத்துவதை விட கொஞ்சம் காய வைத்து பயன்படுத்த வேண்டும். அத்துடன் எலுமிச்சை அல்லது ஆரஞ்சு தோல்கள் இருந்தால் கொஞ்சமாக உப்புத்தூள் தடவி கட்டையில் தேய்க்க வேண்டும். இப்படி செய்தால் தோல்களில் உள்ள சிட்ரிக் அமிலம் கட்டையில் உள்ள துர்நாற்றங்களை இல்லாமல் செய்யும். அதே சமயம், எலுமிச்சை சாறு கட்டையில் படிந்திருக்கும் அழுக்குகளை அகற்றும்.
3. சப்பாத்தி உருட்டுவதற்கு முன்னர் வெதுவெதுப்பான நீரில் நன்கு கழுவ வேண்டும். அப்படி கழுவினால் அழுக்குகள், ஒட்டியிருந்த மா இல்லாமல் போகும். அத்துடன் கட்டையை முழுவதுவமாக சுத்தம் செய்து காய வைத்து விட்டால் நோய்கள் வருவது குறையும்.
4. சப்பாத்தி கட்டை மற்றும் உருளை இரண்டையும் தண்ணீரில் நனைத்த பின்னர் ஒரு கரண்டி உப்பை தூவி நன்றாக துணி வைத்து மெதுவாக தேய்க்கவும். இப்படி உப்பு பயன்படுத்தி தேய்க்கும் பொழுது அழுக்கு இல்லாமல் போகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |