உங்களது ஆதார் கார்டு தவறாக பயன்படுத்தப்படுகின்றதா? கண்டறிய இதே வழிமுறைகள்
உங்களது ஆதார் தவறாக பயன்படுத்தப்படுகின்றதா? என்பதை தெரிந்து கொள்ள இதோ 5 வழிகள்.
ஆதார்
ஆதார் அட்டை இந்திய குடிமகனுக்கு மிக முக்கியமான ஆவணம் ஆகும். இதில் உங்கள் பெயருடன் முகவரி தொடங்கி அனைத்து தகவல்களும் உள்ளதால், தவறானவர்கள் கைகளில் சிக்கினால் தவறாக பயன்படுத்தப்படும் நிலையும் ஏற்படும்.
குறித்த பிரச்சனையை தவிர்க்க விரும்பினால் உங்களது ஆதார் எங்கு பயன்படுத்தப்படுகின்றது என்பதை நீங்கள் எளிதாகக் கண்டறியலாம். இதற்கு நீங்கள் UIDAI என்ற இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
வழிமுறைகள் என்ன?
முதலில் ஆதாரின் இணையதளமான UIDAI என்ன இணைய தளத்திற்குச் செல்ல வேண்டும்.
ஆதார் சேவைகளின் கீழே அங்கீகார வரலாற்றின் விருப்பத்தைக் காண்பீர்கள். அதனை க்ளிக் செய்யவும்.
பின்னர் உங்களது ஆதார் எண்ணை உள்ளிட்டு பாதுகாப்பு குறியீட்டை உள்ளிட்டு Send OTP என்பதை க்ளிக் செய்யவும்.
இதன் பின்பு உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு வந்திருக்கும் OTP-ஐ சரியான உள்ளிட்டு சமர்ப்பிக்க வேண்டும்.
பின்பு உங்களுக்கு 6 மாத தகவல் கிடைக்கும். இதில் உங்கள் ஆதார் எங்கு எப்போது பயன்படுத்தப்பட்டது என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.
ஆதார் தவறாக பயன்படுத்தப்பட்டால் என்ன செய்வது?
உங்களது ஆதார் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக நீங்கள் நினைத்தீர்கள் என்றால், தாமதிக்காமல் 1947 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |