உங்கள் ஸ்மார்ட்போன் தொலைந்துவிட்டால்.. GPay, PhonePe போன்ற ஆப்களை உடனடியாக ப்ளாக் செய்வது எப்படி?
இன்றைய நவீன காலக்கட்டத்தில் மக்கள் அன்றாடம் பணத்தை கையில் வைத்திருப்பதைவிட ஒரு பொருளை வாங்க விற்க அதிகமாகவே கூகுள்பே, போன்பே மற்றும் பேடிஎம் செயலிகளை பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.
அதிலும், யுபிஐ ஐடி மூலம் பணம் செலுத்துவது என்பது மிகவும் எளிமையாக இருக்கிறது. ஆனால் இதில் மிகப்பெரிய ஆபத்தை இருப்பதையும் யாரும் உணர்வதில்லை.
ஒரு வேளை நீங்கள் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன் தொலைந்துவிட்டால், உங்களின் வங்கிக் கணக்குகளும் ஆபத்தில் சிக்கும் அபாயம் இருக்கிறது என்பதால் PhonePe, Google Pay மற்றும் Paytm உள்ளிட்ட யுபிஐ ஐடிகளை உடனே பிளாக் செய்ய வேண்டும்.

பிளாக் செய்யும் வழிமுறை
* முதலில் Paytm Payments Bank உதவி எண்ணை 01204456456 என்ற எண்ணிற்கு அழைக்கவும்.
* தொலைந்துபோன தொலைபேசி என்ற ஆப்சனை தேர்ந்தெடுக்கவும்.
* மாற்று தொலைபேசி எண் என்ற ஆப்சனை தேர்ந்தெடுத்து உங்களின் தொலைந்த தொலைபேசி எண்ணை பதிவிட வேண்டும்.
* அதன் பிறகு, ஸ்மார்ட்போனில் இருந்து வெளியேறும் ஆப்சனை தேர்ந்தெடுக்க வேண்டும்.
* இதனை செய்தவுடன் Paytm இணையதளத்திற்குச் சென்று 24x7 உதவியைத் தேர்ந்தெடுக்கவும்.
* அதில் Report a Fraud என்பதைத் தேர்ந்தெடுத்து உங்களின் Issues ஆப்சனில் புகாரை பதிவிட வேண்டும்.
* இதற்குப் பிறகு, உறுதிப்படுத்தல் செய்தியைப் பெறுவீர்கள். Paytm உங்கள் கணக்கைச் சரிபார்த்து தற்காலிகமாகத் தடுக்கும். வாடிக்கையாளர்களுடன் பேசுவதற்கு யூசர்கள் 18004190157 என்ற எண்ணில் அழைக்கலாம்.

* அதில் சேவை மைய அதிகாரி உங்களின் தகவல்களை சரிபார்த்து கூகுள் பே அக்கவுண்டை முடக்க உதவி செய்வார். 08068727374 அல்லது 02268727374 என்ற எண்ணில் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொள்ளலாம்.
உங்களுக்கு ஓடிபி அனுப்பப்படும். அதில் ஓடிபி பெறவில்லை என்ற ஆப்சனை தேர்ந்தெடுக்கலாம். மீண்டும் ஓடிபி அனுப்பப்படும்போது, அப்போதும் ஓடிபி பெறவில்லை என்ற ஆப்சனை மீண்டும் தேர்ந்தெடுக்க வேண்டும்.
* இதன்பிறகு சிம் மற்றும் மொபைல் தொலைந்துவிட்டது என்ற ஆப்சனை தேர்ந்தெடுக்க வேண்டும்
* எக்ஸிகியூட்டிவ் உங்களிடம் தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, கடைசியாக பணம் செலுத்திய தகவல் மற்றும் பரிவர்த்தனை மதிப்பு போன்ற விவரங்களைக் கேட்டு உங்கள் PhonePe கணக்கைத் பிளாக் செய்ய உதவுவார்.ய்யும் வழிமுறை