Google Pay யூஸ் பண்றீங்களா? உங்க போன் தொலைந்துவிட்டால் உடனே இதை செய்திடுங்க
கூகுள் மற்றும் போன் பே, பேடிஎம் பயன்படுத்துபவர்களுக்கான பதிவே இதுவாகும்.
UPI செயலிகள்
இந்தியா முழுவதும் கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe), பேடிஎம் (Paytm) போன்ற யுபிஐ செயலிகளை மக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த செயலிகள் மூலம் விரைவாகப் பணம் அனுப்பவும், பெறவும் முடியும் என்பதாலும், அவ்வப்போது இதில் சில சலுகைகள் கிடைப்பதாலும் மக்கள் விரும்பி பயன்படுத்தி வருகின்றனர்.
உள்ளூர் சந்தைகள் மட்டுமின்றி வெளியூரில் இருந்து வாங்கும் பொருட்களுக்கும் அமர்ந்த இடத்திலேயே பணத்தை அனுப்பமுடியும் என்பதால் மக்கள் பெரும்பாலும் இந்த டிஜிட்டல் பரிவர்த்தனையையே ஆதரிக்கின்றனர்.
தற்போது உங்களது மொபைல் திருடு போய்விட்டாலோ, அல்லது தொலைந்து விட்டாலோ யுபிஐ வழியாக பணத்தை ஏமாற்றுவதற்கு வாய்ப்புள்ளது.
எனவே நீங்கள் பயன்படுத்தி வந்த மொலைபல் தொலைந்துவிட்டால், உடனே யுபிஐ ஐடியை பிாள் செய்வது மிகவும் அவசியமாகும்.
இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதையே இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
Representational Image
கூகுள் பே(Google Pay)
நீங்கள் கூகுள் பே செயலிலைய தொலைந்து போனில் வைத்திருந்தீர்களென்றால் 18004190157 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு தேவையான விவரங்களைக் கொடுத்து உங்களது யுபிஐ ஐடியை பிளாக் செய்யலாம்.
போன் பே (Phone Pe)
அதேபோல் நீங்கள் போன்பே (PhonePe) செயலியைப் பயன்படுத்தி வந்தால் 02268727374 அல்லது 08068727374 என் எண்ணை அழைத்து உடனே யுபிஐ ஐடியை பிளாக் செய்யலாம்.
பேடிஎம்(Paytm)
ஒருவேளை நீங்கள் பேடிஎம் (Paytm) செயலியைப் பயன்படுத்தி வந்தால் 01204456456 என்ற எண்ணை அழைத்து யுபிஐ ஐடியை பிளாக் செய்யலாம். குறிப்பாக கஸ்டமர் கேர் அதிகாரிகள் தேவையான தகவல்களை உறுதி செய்த பிறகு தான் யுபிஐ ஐடியை பிளாக் செய்வார்கள்.
Representative Image
அதுவும் பேடிஎம் செயலியைப் பயன்படுத்தும் பயனர்கள் இணையதளத்தின் 24 மணி நேர ஹெல்ப் செக்ஷனை தொடர் கொண்டு புகார் கொடுக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |