Google Pay-வில் தவறுதலாக அனுப்பிவிட்டீர்களா? திரும்ப பெறுவது எப்படி?
கூகுள் பே-யில் பணம் மற்றவர்களுக்கு தவறுதலாக அனுப்பிவிட்டால் இதனை எவ்வாறு திரும்ப பெறலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
ஆன்லைன் பணபரிமாற்றம்
இன்றைய காலத்தில் ஆன்லைன் பணபரிமாற்றம் கொண்ட செயலியான Google pay, Phonepe, Paytm போன்றவை வந்துவிட்டதால் மக்கள் பணபரிமாற்றத்தினை இதன் மூலமாகவே செய்து வருகின்றனர்.
அதேபோல் இந்த யுபிஐ செயலிகள் பயன்பாட்டுக்கு வந்ததும், மக்கள் வங்கிக்குச் செல்வதும், ஏடிஎம் மையங்களைத் தேடி சென்று பணம் எடுப்பது அதிகமாகவே குறைந்து வருகின்றது.
சிறு பொருட்கள் வாங்கினால் கூட உடனே ஸ்கேன் செய்து பணத்தை போட்டுவிடுகின்றனர். இதனால் சில்லரை பிரச்சனை மட்டுமின்றி நேரமும் மிச்சப்படுகின்றது.
இவ்வாறு நாம் அனுப்பும் போது தவறுதலாக தெரியாத நபருக்கு பணம் செலுத்தினால், அதனை எவ்வாறு திரும்ப பெறுவது என்ற கேள்வி அநேக மக்களுக்கு எழும்பும். இதற்கான தீர்வை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பணத்தை எவ்வாறு திரும்ப பெறுவது?
ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின்படி, தவறான பணப் பரிமாற்றம் நடந்தால், 24-48 மணி நேரத்தில் உங்களது பணத்தைத் திரும்பப் பெறலாம்.
குறிப்பாக பணம் பெறுபவர், செலுத்துபவர் இருவரும் ஒரே வங்கியாக இருந்தால் மிகவும் விரைவாகவே பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.
ஆனோல் இரண்டு வங்கிக் கணக்குகளும் இரண்டு வேறு வங்கிகளில் இருந்தால் பணத்தைப் பெற அதிக நேரம் எடுக்கும்.
பணம் தவறாக அனுப்பிய நபருக்கு தொடர்பு கொண்டு பேசியும் பயனில்லை என்றால் உடனே வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொள்ள வேண்டும். அவர்களின் பரிவர்த்தனையை திரும்ப பெறுவதற்கான வழியை காட்டுவார்கள்.
அதேபோல் நீங்கள் அனுப்பிய பணத்தைத் திரும்பப் பெற பல வங்கிகள் டிரான்ஸாக்ஷன் ரி-கால் போன்ற அம்சங்களை வழங்குகின்றன. உங்கள் வங்கியில் இந்த அம்சம் உள்ளதா என்பதை உறுதிசெய்து கொள்ளவும்.
எங்கும் தீர்வு இல்லையா?
இந்த வழிமுறைகளில் எந்தவொரு தீர்வும் இல்லையெனில், ஆர்பிஐ அமைப்பின் NPCI portal இணையப் பக்கத்தில் புகார் அளிக்கலாம். NPCI வலைத்தளமான npci.org.in தளத்திற்குச் செல்ல வேண்டும்.
அங்கு What we do என்ற பக்கத்திற்குச் சென்று, UPI தேர்வு செய்து Dispute Redressal Mechanism என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
அந்த பக்கத்தில் இருக்கும் புகார் பெட்டியில் நீங்கள் மேற்கொண்ட தவறான பரிவத்தனைக் குறித்த விவரங்களைப் பதிவிடவும்.
photo: Shutterstock
அதுவும் புகார் பெட்டியில், யுபிஐ பரிவர்த்தனை ஐடி, வங்கி பெயர், விர்ச்சுவல் பேமெண்ட் முகவரி, மாற்றப்பட்ட தொகை, பரிவர்த்தனை தேதி, மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண் போன்றவற்றைக் கொடுக்க வேண்டும்.
இதைச் செய்தால் சில மணி நேரத்தில் பணம் திரும்ப வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |