சாணக்கிய நீதி: இந்த பழக்கம் இருப்பவர்கள் வாழ்வில் வெற்றியடைவது உறுதி... என்னென்ன தெரியுமா?
முன்னைய காலத்தில் இந்தியாவின் புகழ்பெற்ற அறிஞர், ஒரு சிறந்த இராஜதந்திரி மற்றும் ஒரு தலைசிறந்த பொருளாதார நிபுணராக திகழ்ந்து உலகம் முமுவதும் பிரபல்யம் அடைந்தவர் தான் சாணக்கியர்.
இவர் தனது வாழ்க்கையில் கடைப்பிடித்த பல்வேறு விடயங்கள் மற்றும் வாழ்க்கையில் சந்தித்த சவால்கள் மற்றும் அனுபவங்களின் தொகுப்பே சாணக்கிய நீதி ஆகும்.
இன்றும் உலகளவில் சாணக்கிய நீதியை பின்பற்றுபவர்கள் ஏராளம். சாணக்கிய நீதியின் அடிப்படையில் ஒரு மனிதன் வாழ்வில் வெற்றி பெறுவதற்கு கட்டாயமாக பின்பற்ற வேண்டிய விடயங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
உணவு
சாணக்கிய நீதியில் அடிப்படையில் நமது எண்ணங்களுக்கும் நாம் உண்ணும் உணவுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றது.
எரிகின்ற விளக்கு இருளை உண்டு கருமையான பகையை வெளியிடுவது போல் நாம் உடலுக்கு என்ன கொடுக்கின்றோமே அதற்கு ஏற்றாற் போல் தான் நமது ஆரோக்கியம் மற்றும் சிந்தனை என்பன அமையும்.
உணவு தொடர்வில் சரியாக கவனம் கொண்டவர்கள் வாழ்வில் நிச்சயம் நல்ல நிலைக்கு செல்வார்கள்.
பணம்
மனித வாழ்க்கையில் பணம் முக்கிய இடம் வகிக்கின்றது.எனவே பணத்தை சரியாக பராமரிக்க தெரிந்தவர்களள் வாழ்வில் நிச்சயம் வெற்றியடைவார்கள்.
பண உதவி செய்யும் போது கூட அதன் மதிப்பையும் தேவையையும் நன்றாக உணர்ந்தவர்களுக்கு தான் செய்ய வேண்டும்.
இந்த குணங்கள் இருந்தால் உங்களுக்கு நிதி முகாமைத்துவ அறிவு சிறப்பாக இருக்கின்றது என்று அர்த்தம். இந்த குணம் உங்களை நிச்சயம் உயர்த்தும்.
பேராசை அற்ற மனம்
சாணக்கிய நீதியின் அடிப்படையில் ரோசையை விட பெரிய நோய் எதுவும் இல்லை. பேராசை வந்துவிட்தால் நமது அறிவு வேலை செய்யாது. அங்கு மனம் ஆட்சி செய்ய ஆரம்பித்துவிடும். மனதை அடக்கி ஆளும் தன்மை கொண்டவர்கள் மட்டுமே வாழ்வில் வெற்றியின் சுவையை ருசிக்க முடியும் என்கின்றார் சாணக்கியர்.
அறிவு
சாணக்கிய நீதியின் படி, ஒருவர் எவ்வளவு அழகாக தோற்றமளித்தாலும், அறிவு இல்லையென்றால், அவரிடம் காணப்படும் அனைத்து செல்வங்களும் பயனற்றது. நம்மிடம் எதுவும் இல்லாத போதும் தெளிந்த அறிவு இருந்தால் வெற்றி நிச்சயம்.
நம்பிக்கை
சாணக்கியர் கூற்றின் படி தன்னம்பிக்கை இருந்தால் கடினமான பணிகளையும், சூழ்நிலைகளையும் கூட எளிதாகக் கடக்கலாம்.
அனைத்தையும் இழந்த நிலையிலும் கூட தன்னம்பிக்கை இருந்தால் அனைத்தையும் மீண்டும் உருவாக்கும் ஆற்றல் வந்துவிடும். வாழ்க்கையில் வெற்றியடையதற்கு தன்னம்பிக்கை இன்றியமையாதது.
விழிப்புணர்வு
சாணக்கிய நீதியின் அடிப்படையில் கோபம், கவலை, விரக்கி போன்ற எந்த நிலையிலும் விழ்ப்புணர்வு மிகவும் அவசியம். சூழ்நிலை எவ்வளவு மோசமானதாக இருக்கின்ற போதிலும் விழிப்புணர்வுடன் செயற்படுகின்றவர்கள் நிச்சயம் வாழ்வில் வெற்றியடைவார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |