முகேஷ் அம்பானி வீட்டு வேலையாட்களை எப்படி தெரிவு செய்கிறார்? தகுதிகளும், தகைமைகளும்
தற்போது இந்தியாவில் இருக்கும் பணக்காரர்களில் முதல் இடத்தில் முகேஷ் அம்பானி தான் இருக்கிறார்.
அம்பானி
ஆசியா முழுவதும் பிரபலமாக இருக்கும் முகேஷ் அம்பானி, கடந்த ஆண்டு அவரது இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு 5000 கோடிக்கு மேல் செலவு செய்தார்.
இந்தியா மட்டுமல்லாமல் ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு கடந்த பிப்ரவரி 22, 2025 நிலவரப்படி, $91.6 பில்லியன் எனக் கூறப்படுகிறது.
அந்த வகையில், முகேஷ் அம்பானி தற்போது இந்திய அளவில் முதல் இடத்திலும் உலக பணக்காரர்களில் 17ஆவது இடத்திலும் இருக்கிறார்.
முகேஷ் அம்பானி குடும்பத்தினருடன் ரூ.15000 கோடி மதிப்புள்ள ஆன்டிலியாவில் வசித்து வருகிறார். 27 மாடி கட்டிடங்கள் கொண்ட இந்த பிரமாண்ட மாளிகையில் கடைசி மாடியில் தான் அம்பானி குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.
வேலையாட்களுக்கான சம்பள விவரங்கள்
இந்த நிலையில், முகேஷ் அம்பானி அவருடைய வீட்டுக்கு வேலையாட்களை எப்படி தெரிவு செய்வார் என்ற விடயம் பெரும்பாலும் யாருக்கும் தெரிந்திருக்காது.
அப்படியாயின், அம்பானியின் ஆன்டிலியாவில் பணிபுரியும் சமையல்காரர், ட்ரைவர் போன்ற பணியாட்களுக்கு லட்சக்கணக்கில் சம்பளம் வழங்கிறாராம்.
மேலும், அவரது வீட்டில் சுமார் 600 முதல் 700 ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். முகேஷ் அம்பானியின் தனிப்பட்ட ஓட்டுநரின் சம்பளம் ஊடக அறிக்கையின் படி, ஒரு மாதத்திற்கு ரூ.2 லட்சம் வழங்கப்படுகிறது.
முகேஷ் அம்பானியின் பாதுகாவலர்களின் மாத சம்பளம் ரூ.14,536 முதல் ரூ.55,869 வரை தொடங்குகிறது என்றும் கூறப்படுகிறது.
தகுதிகள்
ஊடக அறிக்கைகளின்படி, அம்பானி வீட்டில் வேலை பெறுவதற்கு ஒருவர், நேர்காணலின் மூலம் தெரிவு செய்யப்படுவார். அந்த வேலைக்கு தகுந்த சான்றிழ் மற்றும் பட்டம் வைத்திருக்க வேண்டும்.
ஆன்டிலியாவில் வேலைச் செய்யும் பணியாளர்களுக்கு சம்பளத்துடன் மருத்துவ காப்பீடு போன்ற பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன.
அதே சமயம் நிறுவன ஊழியர்களின் சலுகைகளும் கொடுக்கப்படுகின்றன. வேலையாட்களின் ஊதியம் மற்றும் வசதிகள் அவர்களுக்கு இருக்கும் அனுபவம் மற்றும் வேலையை பார்த்து தீர்மானிக்கப்படுகின்றன.
வீட்டு பராமரிப்பு, பாதுகாப்பு, சமையல்காரர்கள் மற்றும் தனிப்பட்ட உதவியாளர்கள் என அனைவரும் ஆன்டிலியாவை பாதுகாப்பதில் முக்கிய பங்காற்றுகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |