முதுகுத் தண்டு வலியால் மன சோர்வு ஏற்படுமா? 30 வயதை தாண்டியவர்கள் தெரிஞ்சிக்கோங்க
பொதுவாக 30வயதை தாண்டியவர்கள் தற்போது முதுகுத்தண்டு வலியால் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள்.
இவ்வாறு உருவாகும் வலி வெறும் முதுகுத் தண்டில் மட்டும் ஏற்படுவதில்லை. மாறாக சிலருக்கு மன மற்றும் உடல் ரீதியான பிரச்சினைகளையும் ஏற்படுத்துகின்றது.
அத்துடன் முதுகுத்தண்டு வலியால் மனச்சோர்வும் ஏற்படுகின்றது என மருத்துவர்கள் கூறுகின்றார்கள்.
மேலும் பயம், அனிஸிட்டி, தனிமை மற்றும் தாழ்வு மனப்பான்மை போன்ற மன ரீதியான பிரச்சினைகளையும் சந்திக்கின்றனர்.
அந்த வகையில் முதுகுத்தண்டு வலியால் வேறு என்னென்ன பிரச்சினைகள் ஏற்படுகின்றது என்பதனை தொடர்ந்து பார்க்கலாம்.
முதுகுத்தண்டு வலி
1. முதுகுத்தண்டு வலியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனிஸிட்டி பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது. மேலும் இவர்களுக்கு மன அழுத்தம், பதட்டம் போன்ற பிரச்சினைகளும் இருக்கும். இவர்கள் தனியாக இருக்கும் பொழுது, கூட்டத்தில் இருக்கும் போது பதற்றத்தில் இருப்பது போன்று இருப்பார்கள். இதனை “ அகோராபோபியா ” என்றும் அழைக்கப்படுகிறது.
2. சிலருக்கு திடீரென ஒரு வகை பயம் இருக்கும். இது முதுகுத்தண்டு வலியால் கூட ஏற்படலாம். இந்த பிரச்சினை தீவிரமாக இருக்கும் பொழுது அச்சத்தை உண்டாக்க வாய்ப்பு உள்ளது. இது போன்ற பக்க விளைவுகள் தீவிரமடையும் போது அறுவை சிகிச்சை செய்து கொள்வது சிறந்தது.
3. முதுகுத்தண்டில் காயங்கள் ஏற்பட்டால் அது ஆறுவதற்கு காலம் எடுக்கும். அப்போது நீங்கள் தனிமையில் இருப்பது போல் உணரலாம். இது போன்ற நேரங்களில் வீட்டிலுள்ளவர்களுடன் பொழுதை கழிப்பது சிறந்தது.
4. தாழ்வு மனப்பான்மையை உண்டு பண்ண வாய்ப்பு இருக்கின்றது. இது போன்ற நேரங்களில் மன தைரியம் நோயாளிகளுக்கு அதிகமாக இருக்க வேண்டும்.
5. முதுகுத்தண்டு வலி துக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கின்றது. இது போன்ற பிரச்சினைகள் வந்தால் படுத்த படுக்கையாக இருக்க வேண்டிய நிலை ஏற்படும். ஆகவே துக்கத்திற்கு ஆளாகுவார்கள்.
6. காயங்கள் ஆறுவதற்கு பல நாட்கள் எடுக்கும். எப்போது தான் சரியாகும் என்ற ஒரு வகை விரக்தியை உண்டுபண்ணும். படுக்கையாக இருக்கும் போது மனதை திடப்படுத்தி கொள்வது அவசியம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |