உள்ளாடைகள் கழுவாமல் 2,3 தடவைகள் போடுபவர்களுக்கான பதிவு இதோ! கண்டிப்பாக தெரிஞ்சிகோங்க
பொதுவாக ஆண்கள் போல் அல்லாது பெண்கள் அதிகமான உள்ளாடைகளை பயன்படுத்துவார்கள்.
இவர்கள் பயன்படுத்தும் உள்ளாடைகளை தினம் தினம் கழுவி பயன்படுத்த வேண்டும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
ஏனெனின் பெண்களின் வியர்வையால் வரும் கிருமிகள் தேவையற்ற தொற்றுக்களை ஏற்படுத்தும். இதன்படி, சில பெண்கள் ஒரு உள்ளாடையை சுமாராக இரண்டு, மூன்று நாட்களுக்கு பயன்படுத்துவார்கள்.
இதனால் சரும பிரச்சினைகள் தான் அதிகமாகும். ஆகவே உள்ளாடைகள் ஏன் கண்டிப்பாக துவைக்க வேண்டும்? என்பதனை தொடர்ந்து பார்க்கலாம்.
1. சரும பிரச்சினை
வெளியில் செல்லும் பெண்கள் மற்றும் வீட்டில் வேலைச் செய்யும் பெண்களுக்கு அதிகமாக வியர்க்கும். அதுவும் அவர்களின் நெஞ்சுப் பகுதியை சொல்லவே தேவையில்லை. அவர்களின் மேல் உள்ளாடையில் வியர்வைகள், அழுக்குகள், எண்ணெய்கள் மற்றும் தூசிகள் ஆகிய பதார்த்தங்கள் இருக்கும்.
இதனை தொடர்ந்து துவைக்காமல் மேல் உள்ளாடையை பயன்படுத்தும் போது உள்ளாடையிலிருக்கும் பூஞ்சை மற்றும் நுண்ணுயிர்கள் இனப்பெருக்கம் செய்யும் இதனால் பல வகையான தோல் வியாதிகள் உங்கள் அந்தரங்க பகுதிகளை பாதிக்கலாம்.
2. சொறி சிரங்கு பிரச்சினை
மேல் உள்ளாடையை துவைக்காமல் பயன்படுத்தும் போது வியர்வையால் வரும் பக்றீயாக்கள் விரிவடைந்து காலப்போக்கில் நெஞ்சு பகுதியில் சொறி மற்றும் சிரங்கை ஏற்படுத்தும். முதலில் சிவப்பு நிற புள்ளியாக இருக்கும் இதனை தொடர்ந்து படர்ந்து ஒரு வகை அரிப்பை ஏற்படுத்தும்.
3. மார்பக காம்பு வெடிப்பு
மேல் உள்ளாடையில் இருக்கும் வியர்வை உங்கள் மார்பகங்களில் இருக்கும் காம்பை வரட்சியடைய வைக்கும். இதனால் வெடிப்பு ஏற்பட்டு அதனை நாம் கைகளால் தீண்டும் போது புண்ணாக மாறும். வலி அதிகமாகவே இருக்கும்.
4. பருக்கள் தோன்றும்
உடலில் வியர்வைகள் அகற்றாமல் படிந்திருக்கும் பட்சத்தில் வியர்வையால் திறக்கும் துவாரங்களை அழுக்குகள் படிந்து நிரப்பும். இதனால் தான் பருக்கள் உண்டாகின்றது. சில நாட்களில் இறுக்கமாக உள்ளாடைகளை அணியும் போது அது உராய்விற்குள்ளாகி அந்த இடங்களில் வெடிப்பும் ஏற்படும்.
5. துர்நாற்றத்தை அதிகரிக்கும்
பொதுவாக ஆண்களை விட பெண்களுக்கு ஹார்மோன்ஸ் மாற்றங்கள் காரணமாக அளவிற்கு அதிகமாக வியர்க்கும். இவ்வாறு வியர்க்கும் போது ஆடைகளை மாற்றாமல் இருந்தால் அது காலப்போக்கில் அதிகப்படியான துர்நாற்றத்தை ஏற்படுத்தும்.
முக்கிய குறிப்பு
உள்ளாடைகளை இரண்டு, மூன்று தடவைகள் பயன்படுத்தக்கூடாது. ஒரு உள்ளாடை ஒரு நாள் மட்டும் தான் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு செய்வதால் ஆரோக்கியம் நிலைத்திருக்கும். உள்ளாடைகளை நன்றாக வெயிலில் போட வேண்டும். இவ்வாறு செய்வதால் பக்றீயாக்கள் அழியும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |