இரவில் உள்ளாடை அணியாமல் இருந்தால்.. உடலில் என்னென்ன மாற்றம் நடக்கும் தெரியுமா?
பொதுவாக உள்ளாடைகளை அணியாமல் இருப்பது உங்களுக்கு தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பை குறைக்கிறது. நீங்கள் இறுக்கமான உள்ளாடைகளை அணியும் போது அந்தரங்க பகுதியில் அரிப்பு, எரிச்சல் போன்றவற்றை சந்திக்க நேரிடலாம்.
இதுவே உள்ளாடைகள் இன்றி காற்றோட்டமாக இருக்கும் போது நிறைய நன்மைகளை பெறுவீர்கள். உங்க அந்தரங்க பகுதி சுவாசிக்க இடம் கொடுக்கிறீர்கள். ஏனெனில் இறுக்கமான உள்ளாடைகளால் வியர்வை அதிகமாகி அந்த இடங்களில் பாக்டீரியா பெருக்கம் அதிகமாகிறது.
மேலும், உள்ளாடைகளை அணிவதை விட உள்ளாடைகளை அணியாமல் இருக்கும் போது தொற்றுநோய்களின் ஆபத்தை குறைக்க முடியும். பிறப்புறுப்பு பகுதியில் உருவாகும் திரவங்கள் உங்க உள்ளாடைகளில் பட்டு ஒரு வித ஈரத்தன்மையை உருவாக்கலாம்.
இதனால் ஈரமான பகுதியில் பாக்டீரியா பெருக்கம் அதிகமாக வாய்ப்பு உள்ளது. இந்த பாக்டீரியாக்கள் தொற்றே சில நேரங்களில் நோய்களுக்கு வழி வகுக்கும். எனவே தூங்கும் போது உள்ளாடைகளை துறந்து தூங்குங்கள். இதன் மூலம் காற்றோட்டமான சூழல் ஏற்பட்டு பாக்டீரியா தொற்று குறைய வாய்ப்பு உள்ளது.
மேலும், இரவில் தூங்கும் போது உள்ளாடைகள் இல்லாமல் தூங்குவது உங்களுக்கு நல்ல தூக்கத்தை தரும் என அறிவியல் கூறுகிறது. அந்தரங்க பகுதியில் அரிப்பு, எரிச்சல் இருந்தால் உங்களால் நிம்மதியாக தூங்க முடியாது.
எனவே அந்த மாதிரியான சமயங்களில் உள்ளாடைகளை துறந்து காற்றோட்டமாக தூங்குங்கள். இறுக்கமான உள்ளாடைகளை அணியும் போது நீங்கள் சங்கடமாக உணர நேரிடலாம். அந்தரங்க பகுதியில் ஏற்படும் வியர்வை, உள்ளாடைகள் சருமத்துடன் உராய்வு ஏற்படும் போது எரிச்சல், அரிப்பு ஏற்படும்.
எனவே முடிந்த வரை உள்ளாடை இன்றி இருப்பது இது போன்ற சங்கடங்கள் வராமல் தடுக்கும். இல்லை என்றால் நல்ல காற்றோட்டமான பருத்தி உள்ளாடைகளை தேர்ந்தெடுங்கள்.
அந்தரங்க பகுதிகளில் ஏற்படும் முக்கியமான தொற்றுகளில் பூஞ்சை தொற்றும் மிக முக்கியமானது. இறுக்கமான உள்ளாடைகளை அணிவது, அதிகப்படியான ஈரப்பதம் உள்ளாடைகளில் இருப்பது, தூய்மையற்ற உள்ளாடைகள் இவற்றால் பூஞ்சை தொற்று ஏற்படலாம்.
இது ஈஸ்ட் தொற்றை ஏற்படுத்தி அரிப்பு, எரிச்சல் மற்றும் பிறப்புறுப்பு துர்நாற்றத்தை ஏற்படுத்தும். எனவே உள்ளாடைகள் இல்லாமல் இருப்பது பூஞ்சை தொற்று அபாயத்தை குறைக்கும்.