ஜீன்ஸ் பேண்ட் துவைக்க போடும் பழக்கம் இருக்கா? எச்சரிக்கும் மருத்துவர்
பொதுவாக நாம் ஜீன்ஸ் பேண்ட் / ஷர்ட் அணியும் பழக்கம் கொண்டவர்களாகவே இருக்கிறோம்.
குறைந்த செலவு, பெரிதாக கழுவ வேண்டிய அவசியம், பார்ப்பதற்கு நேர்த்தியாக இருக்கும் போன்ற காரணங்களால் ஜீன்ஸ் பேண்ட் / ஷர்ட் அணிவதை பழக்கப்படுத்திக் கொண்டோம்.
இதன் ஆயுட்காலம் மற்ற ஆடைகளை விட அதிகம் என்றாலும் கழுவாமல் பயன்படுத்தும் பொழுது சில ஆரோக்கிய பிரச்சினைகள் வர வாய்ப்பு உள்ளது என மருத்துவர் எச்சரிக்கிறார்.
ஜீன்ஸ் உடைகளை அடிக்கடி துவைத்தால் அதன் ஆயுட்காலம் குறைந்து விடும் என்ற பயத்தில் 10 தடவைகள் கூட கழுவாமல் பயன்படுத்தும் நபர்களும் இரக்கிறார்கள். ஆனால் இது நாளடைவில் சரும நோய்களை ஏற்படுத்தி விடும். ஜீன்ஸ் உடைகளை எத்தனை நாட்களுக்கு ஒருமுறை துவைக்க வேண்டும் என்பதில் தெளிவு இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மாத்திரமே பிரச்சினைகள் வராமல் தடுக்க முடியும்.
அந்த வகையில், ஜீன்ஸ் உடைகளை கழுவாமல் தொடர்ந்து அணியும் பொழுது என்னென்ன பிரச்சினைகள் வரலாம் என்பதை பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.

ஆரோக்கிய குறைபாடுகள்
1. ஜீன்ஸ் இருக்கமாக அணியும் பொழுது நமது வியர்வை அதில் இருக்கும். கழுவாமல் தொடர்ந்து பயன்படுத்தும் நபருக்கு பூஞ்சை தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. சுமாராக 10-15 நாட்களுக்கு கழுவாமல் பயன்படுத்தினால் மடங்குகளாக அதிகரித்து விடும்.
2. பூஞ்சைகள், சருமத்தில் படர்தாமரை, வெள்ளை திட்டுக்கள் போன்ற சரும பிரச்சினைகள் வர வாய்ப்பு உள்ளது. அதிலும் குறிப்பாக உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கும், சர்க்கரை வியாதியுள்ளவர்களுக்கு கடும் சோதனையை ஏற்படுத்தி விடும்.

3. ஜீன்ஸ் மட்டுமல்ல எந்த ஆடையையும் 5 தடவைகளுக்கு மேல் பயன்படுத்த வேண்டாம் என மருத்துவர் எச்சரிக்கிறார்கள். பல சரும பிரச்சினைகளுக்கு ஆடையும் ஒரு காரணமாக இருக்கிறது. வேலை இல்லாமல் வேலைச் செய்பவர்களும் இதனை கடைபிடிப்பது அவசியம்.
4. ஏற்கனவே சருமத்தில் தொற்று இருப்பவர்களின் ஆடைகளை பயன்படுத்துவதை குறைத்து கொள்ள வேண்டும். ஏனெனின், அவை உங்களின் உடலுக்கு இழகுவாக வந்து விடும். அப்படியொரு நிலை வந்து விட்டால் குறைந்தது 15 நிமிடங்கள் கிருமிநாசினி போட்டு ஊற வைத்து கழுவ வேண்டும்.

5. முடிந்தளவு உங்களுடைய ஆடைகளை வெயிலில் போட்டு காய வைப்பது நல்லது. அல்லது அயர்ன் செய்த பின்னர் பயன்படுத்துவது நல்லது. ஏனெனின் பூஞ்சை தொற்றுக்கள் அழிக்கப்படும்.
6. ஜீன்ஸ் போன்று உள்ளாடைகளிலும் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை அன்றாடம் கழுவி மாற்ற வேண்டும். சூரிய ஒளி நன்றாக படும் இடத்தில் காய வைப்பது அவசியம். பருத்தி அல்லது லினன் துணிகளில் உள்ளாடை பயன்படுத்தினால் தொற்றுகளில் இருந்து தப்பிக்கலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |