சிங்கப்பெண் சுனிதாவிற்கு 1 நாளைக்கு கிடைத்த சம்பளம் இவ்வளவு தானா?
286 நாட்கள் விண்வெளியில் சிக்கிய நாசா வீரர்களுக்கு கிடைத்த சம்பளம் தொடர்பான விபரம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
விண்வெளி வீராங்கனை சுனித்தா வில்லியம்ஸ்
சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) விண்வெளி வீரர்கள் நீண்ட காலம் தங்குவதற்கு நாசா சிறிய பணத்தொகையே ஒதுக்கியுள்ளது. இது குறித்து டிரம்ப் பேசியிருக்கிறார்.
விண்வெளி வீரர்கள் நீண்ட காலம் தங்குவதற்கு நாசா ஒதுக்கிய சிறிய தொகையைக் கண்டு அதிர்ச்சியடைந்ததாகத் தோன்றியது. "யாரும் இதை என்னிடம் சொன்னதில்லை"
அவர்கள் கடந்து வந்த பாதையைப் பார்க்கும்போது அவர்களுக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் குறைவாகவே இருக்கிறது.
மார்ச் 18ஆம் தேதி புளோரிடாவின் டல்லாஹஸ்ஸிக்கு அருகிலுள்ள மெக்சிகோ வளைகுடாவில் டிராகன் விண்கலத்தில் விண்வெளி வீரர்கள் நான்கு பேர் தரையிறங்கினர் .
வீரர்களின் மீட்புப் பணியில் மஸ்க் தலையிட்டதற்கு டிரம்ப் பாராட்டு தெரிவித்து இருந்தார். "எலான் இல்லையென்றால், அவர்கள் அங்கே நீண்ட காலம் இருக்க வேண்டியிருக்கலாம்" என்றும் டிரம்ப் கூறினார்.
விண்வெளி வீரர்களுக்கு ஒரு நாளைக்கு 5 டாலர் மட்டுமே கூடுதல் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு கூடுதல் ஊதியத்தை தனிப்பட்ட முறையில் வழங்குவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை உறுதியளித்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |