Mobile Recharge: 28 நாள் ரீசார்ஜ் பிளானுக்கு பின்னணியில் இப்படியொரு காரணமா?
தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் திட்டத்தினை 28 நாட்களுக்கு வைத்திருப்பதற்கான காரணம் என்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
இன்றைய காலத்தில் போன் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்து வருகின்றது. ஒரே நபர் 2 போன்களையும் வைத்து பயன்படுத்துகின்றனர்.
நாம் போன் பயன்படுத்த வேண்டும் என்றால் அதற்கு ரீசார்ஜ் செய்வது கட்டாயமாகும். ரீசார்ஜ் திட்டத்தில் ஒவ்வொரு நிறுவனமும் தனக்கு லாப நோக்கத்தை கொண்டே செயல்பட்டு வருகின்றது.
முன்பு பேசுவதற்கு மட்டும் ரீசார்ஜ் செய்த வந்த நிலையில், இன்கம் கால்கள் ரீசார் செய்யாமலும் வருமாறு இருந்தது. ஆனால் தற்போது டெலிகாம் நிறுவனம் இன்கம் கால் வருவதற்கு ஆக்டிவ் ரீசார்ஜ் பிளான் இருக்க வேண்டும் என்ற கட்டாயத்தை வைத்துள்ளது.
அவ்வாறு ரீசார்ஜ் செய்யவில்லையெனில், நமக்கு வரும் போன் அழைப்புகளும் நிறுத்தப்பட்டு வருகின்றது. சில மாதங்கள் சிம் கார்டுக்கு ரீசார்ஜ் செய்யாவிட்டால் அந்த சிம் டீ ஆக்டிவேட் கூட கம்பெனிகள் செய்து விடுகின்றது.
ரீசார்ஜ் பிளான் வேலிடிட்டி
இந்நிலையில் தொலைதொடர்பு நிறுவனங்கள் தங்களது ரீசார்ஜ் பிளானை 28 நாட்கள், 56 நாட்கள் என்று கொடுக்கின்றது. ஆனால் 30 நாட்கள் என்று எந்த நிறுவனமும் கொடுப்பதில்லை. இதற்கு பின்னால் சில சுவாரசியமான விடயம் இருக்கின்றது.
உதாரணமாக நீங்கள் 28 நாட்கள் வேலிடிட்டி பிளானுடன் ஒவ்வொரு மாதமும் ரீசார்ஜ் செய்து வருகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். இந்த கணக்குப்படி பார்த்தால் நீங்கள் வருடத்திற்கு 13 முறை ரீசார்ஜ் செய்ய வேண்டியிருக்கும்.
அதாவது வருடத்திற்கு 12 மாதங்கள் இருந்தால் நீங்கள் மட்டும் 13 மாதங்களுக்கு ரீசார்ஜ் செய்கிறீர்கள் என்று அர்த்தம்.
இப்படி வேலிடிட்டியை குறைப்பதால் வருடத்திற்கு 13 மாதங்கள் பணம் செலுத்த வேண்டியிருக்கிறது. டெலிகாம் கம்பெனிகள் லாபத்தை அதிகரிப்பதற்கு கொண்டு வந்த நடைமுறை இதுவாகும்.
ஆனால் 28 நாட்கள் ரீசார்ஜ் செய்பவர்களை விட 365 நாட்டிகள் வேலிடிட்டி பிளானை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் நிச்சயம் லாபம் அடைகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
