ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்?
பொதுவாக இந்த உலகில் பிறந்த அனைத்து உயிர்களுக்கு தூக்கம் என்பது மிக முக்கியமானதொன்றாகும்.
சரியான நேரத்திற்கு தூங்கவில்லையென்றால் அவசியமற்ற பின்விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும்.
அத்துடன் விலங்குகளை விட மனிதர்கள் அதிகமான நேரைம் தூங்குகிறார்கள்.
அந்த வகையில் ஒரு நாளை மனிதர்கள் எவ்வளவு நேரம் உறங்க வேண்டும் என தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
தூக்கம் தொடர்பில் அறியாத சில விடயங்கள்
Image - raisingchildren
1. சாப்பிடுவதற்கு, வேலைகளை சரியாக செய்வதற்கு சிலர் நேர அட்டவணையை பின் தொடர்வார்கள். இது போல் தூங்குவதற்கு சரியான நேரத்தை ஒதுக்க வேண்டும்.
2. சரியாக 20 வயதிற்கு மேற்பட்ட இளைஞர்கள் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தூங்க வேண்டும். இது தான் நிறைவான வாழ்க்கைக்கான அத்திவாரமாக இருக்கும்.
3. இரவில் நேரம் சென்று உறங்குவது காலையில் அதிகமான நேரம் தூங்குவது ஆரோக்கியமான வாழ்க்கையை பாதிக்கும் ஒரு விடயமாக பார்க்கப்படுகின்றது.
Image - helpguide
4. ஆரோக்கியமான மனிதர்கள் ஒரு நாளைக்கு ஆறு முதல் எட்டு மணி நேரம் தூங்க வேண்டும்.
5. தூக்கம் மனித செரிமான அமைப்பையும் பாதிக்கிறது. குறைந்த பட்சம் ஆறு மணி நேரமாவது தூங்காதவர்களுக்கு வயிற்று தொடர்பான நோய்களில் பாதிக்கப்படுவார்கள்.
6. பாடசாலை செல்லும் மாணவர்கள் இரவு முழுவதும் கண் விழித்து படிப்பார்கள். இந்த பழக்கம் அவர்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும். எவ்வளவு பிரச்சினையாக விடயமாக இருந்தாலும் காலையில் எழுந்து செய்வது ஆரோக்கியத்தை தரும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |