10 மில்லியன் Views வந்தால் YouTube-ல் வருமானம் எவ்வளவு?
YouTube இல் பல வீடியோக்களை போட்டு சம்பாதிப்பவர்களுக்கு ஒரு வீடியோவிற்கு 10 மில்லியன் Views வந்தால் அவர்கள் எவ்வளவு பணம் சம்பாதிக்கின்றார்கள் என்பதற்கான தகவல் வெளியாகி உள்ளது.
10 மில்லியன் Views
நீங்கள் வீட்டில் இருந்து கொண்டே மக்களுக்கு தேவையான வீடியோக்களை You Tube எனும் சமூக வைலத்தளத்தில் பதிவு செய்யும் போது உங்கள் வங்கி கணக்கு அதிகமாகும்.
இது எப்படி என்பது பலருக்கும் இருக்கும் ஒரு சந்தேகம். இன்றைய டிஜிட்டல் யுகத்தில், யூடியூப் என்பது வீடியோக்களைப் பார்ப்பதற்கான ஒரு தளம் மட்டுமல்ல. அது ஒரு முக்கிய வருமான ஆதாரமாகவும் மாறிவிட்டது.

இதனால் பலரும் தற்போது யூடியூபில் வீடியோக்கள் தயாரித்து பதிவிடுவதை வழக்கமாக்கி உள்ளனர். இந்த யூடிப் தளத்தில் பல விதமான வீடியோக்கள் பதிவிடப்படுகின்றன.
அதில் ஒவ்வொரு வகை வீடியோக்களுக்கும் ஒவ்வொரு விதமான சம்பளம் வழங்கப்படுகின்றது. ஒரு கன்டென்ட் கிரியேட்டர் (content creator) யூடியூபில் எவ்வளவு சம்பாதிக்க முடியும் என்று தான்.
அதன்படி, யூடியூப் 10 மில்லியன் பார்வைகளுக்கு எவ்வளவு பணம் கொடுக்கிறது என்பதை பார்க்கலாம்.

எவ்வளவு பணம்
யூடியூப் கன்டென்ட் கிரியேட்டர்களுக்கு பணம் யூடியூ மூலம் பணம் கிடைக்காது. அதற்கு பதிலாக கன்டன்ட் கிரியேட்டர்களுக்கு விளம்பரம் மூலம் இருந்தே பணம் கிடைக்கிறது.
நீங்கள் பதிவிடும் வீடியோவின் இடையே ஒரு விளம்பரம் இயக்கப்படும்போது, பார்வையாளர்கள் அதைப் பார்க்கிறார்கள் அல்லது அதைக் கிளிக் செய்கிறார்கள் என்றால், உங்களுக்கு வருவாய் கிடைக்கும்.
இது விளம்பர வருவாய் (ad revenue) என்று அழைக்கப்படுகிறது. அதேபோல், CPM, RPM போன்ற காரணிகள் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

CPM, RPM என்றால் என்ன?
CPM என்பது Cost Per Mille என்பதைக் குறிக்கிறது. அதாவது ஒரு விளம்பரதாரர் 1,000 பார்வைகளுக்கு எவ்வளவு தொகை செலுத்துகிறார் என்பதே CPM.
RPM என்பது Revenue Per Mille ஆகும். இது ஒரு கிரியேட்டர் 1,000 பார்வைகளுக்கு உண்மையில் எவ்வளவு வருமானம் பெறுகிறார் என்பதை குறிக்கும்.
இந்தியாவில் CPM பொதுவாக குறைவாக இருப்பதால், பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது RPMவும் குறைவாக காணப்படுகிறது.

10 மில்லியன் பார்வைகளுக்கு ஒருவர் எவ்வளவு சம்பாதிக்கிறார்?
இந்தியாவில், 10 மில்லியன் பார்வைகளுக்கு சராசரி YouTube வருமானம் ரூ.80,000 முதல் அதிகபட்சம் ரூ.250,000 வரை இருக்கும். இருந்தாலும் இதை சரியாக சொல்ல முடியாது.
சில சேனல்கள் குறைவாக சம்பாதிக்கலாம் சிலவை அதிகமாக சம்பாதிக்கலாம். நீங்கள் பதிவிடும் கன்டென்ட் நிதி, தொழில்நுட்பம் அல்லது கல்வி போன்ற உயர் மதிப்பு வகைகளில் இருந்தால் அதற்கு வருமானம் அதிகம்.
அதேபோல், YouTube வருவாய் பார்வைகளின் எண்ணிக்கையை மட்டும் சார்ந்தது கிடையாது. வீடியோவின் நீளம், பார்வையாளர் இருப்பிடம் மற்றும் விளம்பரங்களின் எண்ணிக்கை போன்ற காரணிகளும் அவற்றுள் அடங்கும்.

உங்கள் வீடியோக்கள் வெளிநாட்டிலிருந்து அதிக பார்வைகளைப் பெற்றால், உங்கள் வருவாய் அதிகமாக இருக்கும்.
மேலும், AdSense மட்டுமே வருவாயின் ஆதாரம் கிடையாது. YouTube இன் மிகப்பெரிய பயனர்களில் பலர் விளம்பரங்களை மட்டுமே நம்பியிருப்பதில்லை.
பிராண்ட் ஒப்பந்தங்கள், ஸ்பான்சர்ஷிப்கள், இணைப்பு சந்தைப்படுத்தல் மற்றும் உறுப்பினர்களும் குறிப்பிடத்தக்க வருவாயை உருவாக்குகின்றன. பெரும்பாலும், பிராண்ட் டீல்களிலிருந்து கிடைக்கும் வருவாய் AdSense-ஐ விட மிக அதிகமாக இருக்கும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |