துபாயில் மாதவன் வாங்கிய சொகுசு படகு... விலையை கேட்டு வாயடைத்துப்போன ரசிகர்கள்
பிரபலங்களின் புத்தாண்டு கொண்டாட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்ற நிலையில் நயன்தாரா மற்றும் மாதவன் குடும்பத்தினர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் ரசிகர்களின் கவகத்தை ஈர்த்து வருகின்றது.
காரணம் படகில் நயன்தாரா தனது கணவருடன், மாதவன் அவரது மனைவியுடன் இணைந்து கடல் நடுவில் குறித்த அழகிய காணொளியை எடுத்துள்ளனர்.
டெஸ்ட் திரைப்படத்தில் நடிகர் மாதவனுக்கு ஜோடியாக குமுதா என்கிற கதாப்பாத்திரத்தில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படம் இந்த ஆண்டு நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
டெஸ்ட் படத்தின் மூலம் நயன்தாராவுக்கும் மாதவனுக்கும் இடையே சிறந்த நட்பு ஏற்பட்டுள்ள நிலையில், புத்தாண்டு கொண்டாட துபாய்க்கு வந்திருந்த நயன்தாராவை தன்னுடைய படகுக்கு மாதவன் அழைத்து சென்றுள்ளார்.
சொகுசு படகின் விலை
அதனை தொடர்ந்து குறித்த படகு மாதவனுக்கு சொந்தமானது என்ற தகவலுடன் அதன் விலை தொடர்பான விபரங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அண்மையில் துபாயில் வீடு வாங்கிய மாதவன் தற்போது தன்னுடைய எழுத்துப்பணிகளுக்கும் ஓய்வு எடுக்கவும் என சொந்தமாக ஒரு சொகுசு படகை வாங்கியுள்ளார்.
40 அடி நீளம் கொண்ட இந்த படகின் விலை ரூ. 14 கோடி என்ற தகவல் தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |