பிக்பாஸில் இருந்து வெளியேறிய அன்ஷிதா போட்ட முதல் பதிவு.. என்ன கூறி இருக்கிறார் தெரியுமா?
இந்த வாரம் பிக் பாஸ் 8 வீட்டில் இருந்து இரண்டு போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர். அதுவும் யாரும் எதிர்பார்க்காத ஜெப்ரி மற்றும் அன்ஷிதா வெளியேறவுள்ளார்.
பிக் பாஸ்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியானது கடந்த அக்டோபர் மாதம் 6ஆம் திகதி அன்று 24 போட்டியாளர்களுடன் விமர்சையாக ஆரம்பிக்கப்பட்டது.
தற்போது 10 போட்டியாளர்கள் மட்டுமே உள்ள நிலையில், கடந்த வாரம் அன்ஷிதா வெளியேற்றப்பட்டார். அன்ஷிதா பிக்பாஸ் வீட்டில் அதிக கன்டென்ட்களை கொடுப்பவராக திகழ்ந்து வந்தார்.
பிக் பாஸ் 8ம் சீசனில் முக்கிய போட்டியாளராக இருந்த அன்ஷிதா கடந்த வாரம் டபுள் எலிமினேஷன் இருந்த நிலையில் இரண்டாவதாக வெளியேற்றப்பட்டார்.
ஆனால் மற்ற போட்டியாளர்களை போல் அல்லாது அன்ஷிதா மகிழ்ச்சியாக தான் நிகழ்சியில் இருந்து விடைப்பெற்றார்.
அவர் மீது முன்பு இருந்த விமர்சனங்கள் தற்போது காணாமல் போய்விட்டதாக விஜய் சேதுபதியும் குறிப்பிட்டிருந்தார்.
அன்ஷிதா 84 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்தார். இவருக்கு ஒரு நாளைக்கு ரூ.25 ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் 21 லட்சம் கொடுக்கப்பட்டுள்ளாக தெரிவிக்கப்படுகின்றது.
முதல் பதிவு
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அன்ஷிதா தனது சமூக வலைத்தள பக்கத்தில் தனது அழகிய புகைப்படங்களுடன் ஒரு பதிவை வெளியிட்டிருக்கின்றார்.
அதில் அவர் குறிப்பிடுகையில், எனக்கு ஆதரவாக இருந்தவர்களுக்கு அவர் நன்றி. என்னை சுற்றி இருந்த நெகட்டிவிட்டு எல்லாம் இந்த புது வருடத்தில் காணாமல் போகும் என நம்புகின்றேன் என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |