அனிருத், காவ்யாவின் திருமணத்திற்கு எத்தனை கோடி செலவு தெரியுமா?
Anirudh, Kaviya Wedding Cost: இசையமைப்பாளர் அனிருத் மற்றும் காவ்யா மாறன் ஜோடியின் திருமணத்திற்கு செலவான தொகை குறித்த விபரம் தற்போது வெளியாகியுள்ளது.
அனிருத், காவ்யா மாறன்
இசையமைப்பாளர் அனிருத் மற்றுமு் காவ்யா மாறன் இருவரும் காதலித்து வந்த நிலையில் நவம்பர் 11ம் தேதி இவர்களது திருமணம் க்ரீஸ் நாட்டில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்த திருமணத்திற்கு அனிருத் உறவினராக ரஜினிகாந்த் குடும்பம் சென்ற நிலையில், காவ்யாவின் உறவினராக திமுக தலைவர் ஸ்டாலின் குடும்பத்துடன் சென்றுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் செயினை எடுத்துக் கொடுக்க காவ்யா கழுத்தில் அனிருத் அணிவித்துள்ளார். அதே போன்று காவ்யா கையில் திமுக தலைவர் ஸ்டாலின் செயினை கொடுக்க அதை அனிருத் கழுத்தில் அணிவித்துள்ளார்.
இந்த திருமணத்தில் அர்ச்சகர்கள், தாலி எதுவும இல்லாமல் சுயமரியாதை திருமணமாக நடைபெற்றுள்ளது. ஆனால் திருமண நிகழ்விற்கு சுமார் ரூ.100 கோடி செலவு செய்திருப்பார்கள் என்று பிரபல பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.'

செலவு விபரம்
சென்னையிலிருந்து தனிவிமானம் ஏற்பாடு செய்யப்பட்ட நான்கு குடும்பத்தினரும் சென்றுள்ளார்களாம். க்ரீஸ் நாட்டில் உள்ள ஃபோர் சீசன்ஸ் அஸ்டர் ஹோட்டலில் திருமணம் நடந்த நிலையில், விருந்தினர் தங்கும் செலவு என அனைத்தும் சேர்த்து 100 கோடி ரூபாய் செலவாகியிருக்கும் என்று கூறப்படுகின்றது.
அதுமட்டுமின்றி வரும் 21ம் தேதி சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற இருப்பதால் இதற்கு 50 கோடி செலவாகும் என்று தெரியவந்துள்ளது.

ஆக மொத்தம் இவர்களின் திருமண செலவு 150 கோடி ரூபாய் வரும் என்று கூறப்படுகின்றது. தயாரிப்பாளர் கலாநிதி மாறனிடம் ரூ. 24 ஆயிரத்து 600 கோடி சொத்துக்கள் உள்ள நிலையில் திருமணத்திற்கு 100 கோடி தானே என்று இணையத்தில் பேசப்பட்டு வருகின்றது.
திருமணத்தில் மணமக்கள் மட்டுமின்றி உறவினரான ரஜினிகாந்தின் நடனம் இணையத்தில் வைரலாகியதுடன், பிரமிப்பாகவும் பேசப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

சூப்பர் சிங்கர் பிரபலங்கள் சாம் விஷால் - ஸ்ரீநிஷா நிச்சயதார்த்தம் முடிந்தது! வைரலாகும் புகைப்படங்கள்
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |