Google பணியாளர்களின் அடிப்படை சம்பளம் மட்டுமே இவ்வளவா! ஷாக் ஆகாம பாருங்க
கூகுள் நிறுவனத்தின் ஊழியர்களின் சம்பளம் தொடர்பான முழு விபரங்கள் வெளியாகி கேட்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்க டாலரில் வெளியிடப்பட்ட இந்த சம்பள விவரங்கள் இந்திய ரூபாயில் எவ்வளவு என இந்த பதிவில் பார்க்கலாம்.
கூகுள் (Google)
கூகுள் (Google) எனப்படுவது அமெரிக்காவில் தலைமையிடத்தைக் கொண்டு செயற்படும் ஒரு பன்னாட்டு நிறுவனம் ஆகும்.
இணையத் தேடுபொறித் தொழில்நுட்பம், மேகக் கணிமை, இணைய விளம்பரத் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இந்நிறுவனம் செயற்படுகிறது. குறிப்பாக கூகுள் தேடுபொறி, இதன் முதன்மையான சேவையாக அமையப்பெறுகின்றது.
கூகுல் இயங்காத ஒரு நாளை கற்பனை கூட செய்துபார்க்க முடியாது. அந்தளவுக்கு இன்றைய காலகட்டத்தில் இதன் சேவை முக்கியத்துவம் பெறுகின்றது.
கூகுள் ஊழியர்களின் சம்பளம் கூகுள் நிறுவனத்தின் ஊழியர்களின் சம்பள விவரங்கள் தற்போது வெளியாகி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இன்றைய (14.07.2025) நிலவரப்படி, ஒரு அமெரிக்க டாலரின் இந்திய மதிப்பு சுமார் ₹85.86ஆகும். அதன் பிரகாரம் கூகுள் ஊழியர்களின் சம்பள தொதை இந்திய மதிப்பில் எவ்வளவு என இந்த பதிவில் பார்க்கலாம்.
பொறியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளின் சம்பளம்
செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் உள்ள திறமையானவர்களுக்கான தேவை அதிகரித்து வருவதால், கூகுள் மென்பொருள் பொறியாளர்களுக்கு (Software Engineers) ஆண்டுக்கு $109,180 முதல் $340,000 வரை வழங்குகிறது.இது இந்திய மதிப்பில் சுமார் ₹93.75 லட்சம் முதல் ₹2.92 கோடிவரையில் இருக்கும்.
ஆய்வு விஞ்ஞானிகள் (Research Scientists)
ஆண்டுக்கு $155,000 முதல் $303,000 வரை சம்பாதிக்கின்றனர். இது இந்திய மதிப்பில் சுமார் ₹1.33 கோடி முதல் ₹2.60 கோடியாகும்.
கூகுளின் பிற முக்கியப் பதவிகளுக்கான சம்பள விவரங்கள்
இந்திய மதிப்பில்: மூத்த மென்பொருள் பொறியாளர் (Senior Software Engineer):$187,000 முதல் $253,000 வரை (சுமார் ₹1.61 கோடி முதல் ₹2.17 கோடி)
பணியாளர் மென்பொருள் பொறியாளர் (Staff Software Engineer):$220,000 முதல் $323,000 வரை (சுமார் ₹1.89 கோடி முதல் ₹2.77 கோடி).
தொழில்நுட்ப திட்ட மேலாளர் (Technical Program Manager):$116,000 முதல் $270,000 வரை (சுமார் ₹99.60 லட்சம் முதல் ₹2.32 கோடி)
திட்ட மேலாளர் (Program Manager):$125,000 முதல் $236,000 வரை (சுமார் ₹1.07 கோடி முதல் ₹2.03 கோடி)
தயாரிப்பு மேலாளர் (Product Manager):$136,000 முதல் $280,000 வரை (சுமார் ₹1.17 கோடி முதல் ₹2.40 கோடி)
UX வடிவமைப்பாளர் (UX Designer):$124,000 முதல் $230,000 வரை (சுமார் ₹1.06 கோடி முதல் ₹1.97 கோடி)
அடிப்படை ஊதியம் மட்டுமா?
இந்த சம்பளங்கள் அனைத்தும் அடிப்படை ஊதியத்தை மட்டுமே குறிக்கின்றன. கூகுள் ஊழியர்களுக்கு வழக்கமாக வழங்கப்படும் ஊக்கத்தொகை, பங்குகளின் பங்களிப்பு (equity compensation) மற்றும் பிற சலுகைகள் இதில் சேர்க்கப்படவில்லை.
குறிப்பாக AI துறையில் உள்ள கடும் போட்டி காரணமாக, கூகுள் நிறுவனமானது திறமையானவர்களை ஈர்க்கவும், தங்களில் ஊழியர்களை தக்கவைத்துக்கொள்ளவும் இத்தகைய தாராளமான ஊதியங்களை வழங்குகிறமை குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |