காஃபி பிரியர்களே! ஒரு நாளைக்கு எத்தனை முறை காஃபி குடிக்கலாம் தெரியுமா?
காபி அதிகமாக விரும்பும் நபர்கள் ஒரு நாளைக்கு எத்தனை முறை காபி குடிக்கலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
இன்று பெரும்பாலான நபர்கள் காலை எழுந்ததும் முதல் வேலையாக காபியை தான் குடிப்பார்கள். இவை ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்றாலும், ஆனாலும் அதனை யாராலும் மாற்றிக் கொள்ள முடிவதில்லை.
ஆனால், அதிகமாக காபி குடிப்பதால் சோர்வு, கவலை, தூக்கமின்மை, உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய துடிப்பு அதிகரிப்பு போன்ற பலவித உடல்நல பிரச்சனைகளும் ஏற்பட வாய்ப்புள்ளது.
காபியில் உள்ள கஃபைன் மூளையின் செயலாக்கத்திற்கு உதவுவதோடு செறிவு மற்றும் ஆற்றல் அளவை அதிகரிக்கிறது.
காபி குடிப்பதால் நன்மைகள்
காபி குடிப்பதால் டைப் 2 நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைக்கலாம்.
மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், அல்சைமர் மற்றும் பார்கின்சன் போன்ற நோய்களின் அபாயத்தை குறைக்கின்றது.
வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து உடல் எடையை குறைப்பதற்கு உதவுகின்றது.
மனச்சோர்வின் அபாயத்தை குறைக்கவும் செய்கின்றது.
அதிகமாக காபி குடிப்பதால் ஏற்படும் தீமைகள்
இதயத்துடிப்பையும், இரத்த அழுத்தத்தையும் அதிகரிக்கின்றது.
அதிகமாக காபி குடிப்பது பதற்றம் மற்றும் அச்சத்தினை அதிகரிக்கும்.
அசிடிட்டி மற்றும் அஜீரணத்தை ஏற்படுத்துகின்றது.
காபி தூக்கத்தை கெடுக்கின்றது.
கர்ப்பிணி பெண்கள் காபி குறைவாகவே குடிக்க வேண்டும். இவை கருச்சிதைவிற்கு வழிவகுக்கும்.
ஒரு நாளைக்கு எவ்வளவு காபி குடிக்கலாம்?
நாள் ஒன்றிற்கு 400 மில்லி கிராம் அளவிற்கு மேல் காஃபின் உட்கொள்ளக்கூடாது என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். இவை தோராயமாக 4 கப் காபிக்கு சமமான அளவாக இருக்கும்.