பாதாமை ஏன் ஊற வைத்து சாப்பிடனும்? ஒரு நாளைக்கு எத்தனை சாப்பிடனும்?
பாதாம் உடல் நலனுக்கு மிகவும் உகந்தது அதீத நன்மை அளிக்கக்கூடியது.
என்ன தான் அமிர்தமாக இருந்தாலும் அளவுக்கு மிஞ்சினால் அதுவும் நஞ்சாகிறது தானே அது போலத் தான் இதுவும்.
இன்று அதிகமாக பாதாம் சாப்பிட்டால் என்னென்ன தீங்கு ஏற்படும் என்று பார்க்கலாம்.

வயிற்றுக் கோளாறுகள்
அதிகப்படியான பாதாம் நாம் எடுத்துக் கொள்ளும் போது அது செரிமானம் அடைய அதிக நேரத்தை எடுத்துக் கொள்ளும். அதோடு பிற உணவுகளையும் செரிமானம் ஆவதை தடுக்கும் . இதனால் மலச்சிக்கல், அஜீரணம் போன்ற தொல்லைகள் ஏற்படக்கூடும்.
மக்னீசியம்
நீங்கள் அன்றைக்கு எடுத்துக் கொள்ளக்கூடிய உணவிலும் மக்னீசியம் இருக்கிறது. இதைத் தவிர வழக்கம் போல அளவுக்கு அதிகமாக பாதாம் எடுத்துக் கொள்கிறீர்கள் என்று சொன்னால் நம் உடலில் கூடுதலான மக்னீசியம் சேர்ந்திடும். ஏனெனில் பாதாமில் மக்னீசியம் இருக்கிறது. இது ரத்த அழுத்தம் உட்பட பல பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும்.

உடல் எடை
அளவு தெரியாமல் அதிகளவு பாதாம் எடுத்துக் கொள்வதால் அது நம் உடல் எடையை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. பாதாமில் கொழுப்பு இருக்கிறது. ஏற்கனவே கொழுப்பு நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவது கூடவே பாதாமும் என்றால் உடல் எடை மிக வேகமாக அதிகரிக்கும்.
டாக்சின்
பாதாமில் அதிகளவு ஹைட்ரோசியானிக் அமிலம் நிறைந்திருக்கிறது. இதனை நாம் தொடர்ந்து சாப்பிடும் போது நம் உடலில் அதிகளவு சேர்ந்திடும் இதனால் நரம்பு பிரச்சனை, மூச்சுப் பிரச்சனை ஆகியவை ஏற்படக்கூடும். சிலருக்கு இது அலர்ஜியையும் ஏற்படுத்துவதுண்டு.
பாக்டீரியா
உடலில் பாக்டீரியாவின் வளர்ச்சிக்கு பாதாம் துணை நிற்கும். இதனாலேயே பல நாடுகளில் பாதாம் தீங்கு விளைவிக்கக்கூடியது என்று தடை செய்திருக்கிறார்கள். இதனால் தான் பாதாம் ஊற வைத்து சாப்பிடும் பழக்கமும் வந்திருக்கிறது.
ஒரு நாளைக்கு எவ்வளவு பாதாம் சாப்பிட வேண்டும்?
ஒரு நாளைக்கு ஒரு அவுன்ஸ் வரையிலும் சாப்பிடலாம் என்று சொல்லப்படுகிறது.
ஒரு அவுன்ஸ் என்றால் 20 முதல் 24 பாதாம் வரையில் சாப்பிடலாம்.

இதிலிருந்து உங்களுக்கு 160 கலோரியும் ஆறு கிராம் ப்ரோட்டீனும்,14 கிராம் கொழுப்பு, ஐந்து கிராம் ஃபைபர் ஆகியவை கிடைத்திடும்.
பாதாம் ஊற வைத்தோ வறுத்தோ சாப்பிடாமல் அப்படியே சாப்பிடுவதாக இருந்தால் இந்த அளவு பொருந்தும்.
ஊற வைத்த பாதாம்
பாதம் தோலில் அதிகப்படியான டேனின் இருக்கும்.அதாவது பாதாமிற்கு ஒரு பாதுகாப்பு கவசம் போல. அவ்வளவு எளிதாக பாதாமில் இருக்கக்கூடிய சத்துக்களை வெளிவிடாது.
அதனால் தான் அதன் தோலை நீக்கி சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது.