இந்த ஆரோக்கிய பிரச்சினைகள் இருக்கா? அப்போ அளவுக்கு அதிகமா முட்டை சாப்பிடாதீங்க!
பொதுவாகவே எல்லா காலங்களிலும் மலிவு விலையில் பெற்றுக்கொள்ளக்கூடிய உணவுப்பொருட்களின் பட்டியலில் நிச்சயம் முட்டை முக்கிய இடம் வகிக்கின்றது.
புரதத்தின் மிகச்சிறந்த மூலமாக திகழும், முட்டை சாப்பிடுவது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையில், அனைவருக்கும் பிடித்த விடயம் தான்.

ஆனால் ஒரு நாளைக்கு எத்தனை முட்டை சாப்பிட வேண்டும் என்பதில் பெரும்பாலானவர்களுக்கு சந்தேகம் நிழவுகின்றது. அது குறித்த விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
முட்டையில் வைட்டமின் A, D மற்றும் B-12 நிறைவாக காணப்படுகின்றது.அதோடு புரதச்சத்துக்கு முட்டை தான் சரியான உணவாக இருக்கும். உடல் எடையைக் குறைப்போருக்கு முட்டை சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது.

அதேப்போல், கட்டுமஸ்தான உடலைப் பெறவும் முட்டை சாப்பிடுவார்கள். முட்டையின் மஞ்சள் கருவில் விட்டமின் டி சத்து அதிகளவில் இருப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கவும் முட்டை பெரிதும் துணைப்புரிகின்றது.
மூளையின் சுருசுருப்பான இயக்கத்திற்கும், ஞாபக திறன் அதிகரிக்கவும் முட்டையை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

முட்டை ஏராளமான ஊட்டச்சத்துக்களையும், ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டிருந்தாலும் மருத்துவர்கள் கருத்துப்படி அதிகளில் முட்டை சாப்பிடுவது குறிப்பிட்ட சில ஆரோக்கிய பிரச்சினை உள்ளவர்களுக்கு ஆபத்து.
எத்தனை முட்மை சாப்பிடலாம்?
நீரிழிவு நோயாளிகள், இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களாக இருந்தால் ஒரு நாளைக்கு ஒரு முட்டையே போதுமானது என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
காரணம் முட்டை அதிக புரதச்சத்து நிறைந்தது. குறிப்பாக அதன் மஞ்சள் கருவில் அதிக கொழுப்பு நிறைந்துள்ளது. அதாவது ஒரு முட்டையில் 200 மில்லி கிராம் கொழுப்பும் காணப்படுகின்றது.

ஆனால் மனித உடலுக்கு ஒரு நாளைக்கு 300 மில்லிகிராம் கொழுப்பே போதுமானது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இதனால், அதிகமான முட்டையை சாப்பிடுவதால் கொழுப்பின் அளவு அதிகரித்து இதயத்திற்கு பாதிப்பை உண்டாக்க கூடும்.
இரத்தத்தில் நிறைவுற்ற கொழுப்பு அதிகரித்துவிடும். அவை உடலுக்கு கெட்ட கொழுப்பாக மாறி பல உடல் நல பாதிப்புகளை உண்டாக்கும். குறிப்பாக இதயம் தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும் எனவும் சில மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.

தசைகள், மூளை, கண்கள் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் சிறந்த எரிபொருளாக முட்டை திகழ்கின்றது. ஒரு நாளைக்கு 1-2 முட்டைகள் சாப்பிடுவது பாதுகாப்பானது என சமீபத்திய ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.
அந்தவையில், இதய நோய் வரக்கூடிய ஆபத்து காரணிகள், நீரிழிவு நோய் அல்லது அதிக கெட்ட கொழுப்பு உள்ளவர்களுக்கு, வாரத்திற்கு சுமார் 4–7 முட்டைகள் சாப்பிடலாம். அதை விட அதிகமாக முட்டையை எடுத்துக்கொள்ளாமல் இருப்பது நல்லது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |