ரீசார்ஜ் செய்யாத சிம் கார்டு எப்பொழுது செயலிழக்கும்? பலரும் அறியாத தகவல்
மொபைல் ரீசார்ஜ் செய்யாமல் இருந்தால் ஒருவரின் சிம் கார்டு எவ்வளவு நாட்கள் செயலிழக்காமல் இருக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
மொபைல் ரீசார்ஜ்
இன்றைய காலத்தில் மொபைல் போன் என்பது முக்கியமான ஒன்றாக இருக்கும் நிலையில், இதற்கு ரீசார்ஜ் செய்யாவிட்டால் அந்த மொபைல் போனை நாம் பயன்படுத்துவே முடியாத நிலை ஏற்படுகின்றது.
ஆம் முந்தைய காலத்தில் தானாக அழைப்பு கொடுத்து மற்றவர்களிடம் பேசுவதற்கு மட்டுமே காசு என்று இருந்தது.
ஆனால் தற்போது ரீசார்ஜ் செய்யாமல் விட்டுவிட்டால் எதிர் இருக்கும் நபரிடமிருந்தும் நமக்கு போன் கால் வராமல் மாற்றியுள்ளனர்.
இந்த மாற்றம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சிரமத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் போன் கால் வருவதற்காகவே தற்போது ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்பதால் அதனை செய்து வருகின்றனர்.
செயலிழக்கும் சிம் கார்டு
நாம் சிம் கார்டு வைத்திருக்கும் நிறுவனம் ரீசார்ஜ் முடிவடையும் தருணத்தில் ஞாபகப்படுத்துவதற்கு ஒரு குறுந்தகவலை அனுப்பி வைக்கின்றது.
இதனை அவதானித்த பின்பு நாம் ரீசார்ஜ் செய்துவிட வேண்டும். அவர்கள் கொடுத்த நாட்களில் ரீசார்ஜ் செய்யாவிட்டால், ஒரு வாரம் மட்டும் Incoming கால் வரும். அதன் பின்பு incoming, outgoing இரண்டும் நிறுத்தப்படும்.
ஆனால், இப்படி ரீசார்ஜ் செய்யாமல் சிம்மை விட்டால், அந்த நிறுவனம் பிளாக் செய்துவிடும். அந்த எண் பின்னர் வேறு யாருக்காவது கொடுக்கப்படும் தெரியுமா? என்பதை தெளிவாக தெரிந்து கொள்வோம்.
ஒரு சிம் ரீசார்ஜ் செய்யாமல் போனால், தொலைத்தொடர்பு நிறுவனம் எண்ணை மறுஒதுக்கீடு செய்வதற்கு முன் சில படிகளைத் தொடங்குகிறது.
பொதுவாக, 60 நாட்களுக்கு ரீசார்ஜ் நடவடிக்கை இல்லை என்றால், சிம் தற்காலிகமாக செயலிழக்கப்படும்.
இந்த கட்டத்தில், சிம்மை ரீசார்ஜ் செய்து சேவையை மீட்டெடுக்க பயனர் பொதுவாக 6 முதல் 9 மாதங்கள் வரை இருக்கும்.
இந்தக் காலக்கட்டத்தில், எண்ணை ரீசார்ஜ் செய்வதன் மூலம், அது மீண்டும் செயல்படும், இதனால் தொடர்புடைய எண்ணில் எந்த மாற்றமும் இல்லாமல் பயனர் அதை மீண்டும் பயன்படுத்த அனுமதிக்கிறது.
இதனை நாம் கருத்தில் கொள்ளாவிட்டால், நமது சிம் கார்டு செயலிழக்க வைத்துவிடும். செயலிழக்கச் செய்வதிலிருந்து மறுஒதுக்கீடு வரை இந்த முழு செயல்முறையும் வழக்கமாக ஒரு வருடம் ஆகும்.
அதாவது பயனர்கள் தங்கள் சிம் எண்ணை வேறொரு பயனருக்கு ஒதுக்குவதற்கு முன், கடைசி ரீசார்ஜ் செய்ததிலிருந்து 12 மாதங்கள் வரை திறம்பட செயல்படும்.
இந்தக் காலக்கெடுவை தெரிந்து கொண்டு பயனர்கள் தனது முக்கியமான எண்களை செயலில் வைத்துக் கொள்ளலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |