நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை பார்க்கும் பெண்களுக்கு வரும் பிரச்சினைகள்
பெண்களின் வாழ்க்கை என்பது சிக்கல் நிறைந்த படங்களை பார்ப்பது போன்று இருக்கும். ஏனெனின் அவர்களை வாழ்க்கை நடக்கும் விடயங்கள் அணைத்தும் வேறு ஒருவர் தீர்மானிக்கிறார்கள்.
நமது சமூக அமைப்பில் துரதிர்ஷ்டவசமாக குடும்பத்தை வழிநடத்தும் கடினமான பொறுப்பு பெண்களின் தலையில் தான் இருக்கும் பல நூற்றாண்டுகளாக பெண்களின் வாழ்க்கை சமையலறையில் முடிந்து விட்டன.
இதற்காக பலர் போராட்டங்களை செய்து, தியாகங்கள் செய்து தான் தங்களின் உரிமையை வாங்கிக் கொண்டார்கள். ஆனால் தற்போது இருக்கும் சமையலறைகளை தாண்டி பல சாதனைகள் புரிந்தாலும் நமது சமூகத்தில் ஒரு சிலர் விடுதலையாகாமல் இருப்பதை காணக் கூடியதாக உள்ளது.
எமது வீடுகளில் நிச்சயம் ஒரு பெண்ணாவது வேலைக்கு செல்லாமல் இருக்க மாட்டார்கள். இவ்வாறு வேலைக்கு செல்லும் பெண்கள் அவர்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
பெரும்பாலான பெண்கள் தங்கள் குடும்பம் மற்றும் வேலைக்கு இடையே சமநிலைப்படுத்த முயற்சிப்பதில் நேரத்தை செலவிடுவதால் அவர்களின் ஆரோக்கியம் பற்றி பெரிதாக யாரும் கவனம் கொள்வதில்லை.
அந்த வகையில் நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலைப் பார்க்கும் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பாக தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
பெண்களுக்கு வரும் பிரச்சினைகள்
1. போதுமான தூக்கம் இல்லாமல் வேலைச் செய்யும் ஒருவரின் உடல் எப்போதும் சோர்வாகவே இருக்கும். ஏனெனின் அவர்களின் நாளாந்த வாழ்க்கையில், ஆரோக்கியமற்ற உணவுமுறை, நீரேற்றமின்மை போன்ற பிரச்சினைகள் ஏற்படும். இதனால் அவர்களின் உடல்நிலை சோர்வாக இருக்கும்.
2. தூக்கத்தை விட்டு வேலைச் செய்யும் பெண்களுக்கு ஊட்டச்சத்து அதிகமாக இழக்கப்படுகிறது. குடும்ப பொறுப்புகளால் இப்படி வேலைச் செய்யும் பெண்கள் சீக்கிரமாக வயதான தோற்றத்தில் காணப்படுவார்கள். அத்துடன் நீரிழிவு நோய், தைராய்டு போன்ற பிரச்சினைகளும் வரலாம்.
3. பெரும்பாலான பெண்களுக்கு இருக்கும் பொதுவான பிரச்சினை மாதவிடாய் பிரச்சினை. காலதாமதமான மாதவிடாய், PCOD, குறைவான மாதவிடாய் போன்ற பிரச்சினைகள் வர ஆரம்பிக்கும். நீண்ட நேரம் தொடர்ந்து வேலைச் செய்யும் ஒருவரின் மனநிலை மற்றும் உடல்நிலை சீரற்று காணப்படும்.
4. PCOS உள்ள பெண்களின் உடல் பருமன் அதிகமாக இருக்கும். அதே சமயம், டைப் II சர்க்கரை நோய், இதய நோய், மற்றும் மலட்டுத்தன்மை போன்ற கொடுமையான நோய்களும் தாக்க வாய்ப்பு உள்ளது.
5. நீண்ட நேர வேலை பார்க்கும் பெண்கள் உள ரீதியாக அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். அத்துடன் அவர்களுக்கு வேலைப்பளு காரணமாக அவர்களால் நிம்மதியாக இருக்க முடியாது. மன ஆரோக்கியம் பாதிக்கப்பட்ட பெண்களால் ஒரு வேலையை திருத்தமாக செய்ய முடியாது. அதிகமான கோபம், சோர்வு, திருப்தியின்மை ஆகிய பிரச்சினைகளும் ஏற்படலாம்.
6. செரிமானப் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நீண்ட நேரம் வேலைச் செய்யும் பெண்களுக்கு மலச்சிக்கல் ஏற்பட்டு காலப்போக்கில் அது வேறு விதமான நோய்களை ஏற்படுத்தலாம். ஊட்டசத்து குறைபாடுகளும் அவர்களை சூழ்ந்து கொள்ளும் வாய்ப்பு உள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |